இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி இருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்த ராகுல் திராவிடம் பங்களிப்பும் பெரியது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு இந்தியனின் வீரர்களை ஒன்றிணைத்து அழைத்துச் சென்றார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரானது முடிந்தவுடன் தான் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தனது குடும்பத்தாருக்காக நேரத்தை செலவிட வேண்டும் என்பதால் நான் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கேட்டுக் கொண்டதாலும் அவரின் முடிவை மதித்து பிசிசிஐ-யும் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினாலும் ஆண்டுக்கு இரு மாதங்கள் மட்டுமே நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணியில் நிச்சயம் அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நிச்சயம் அவர் ஏதாவது ஒரு அணியின் பயிற்சியாளராக செயல்பட போகுது உறுதி.
ஏற்கனவே மெகா ஏலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த மெகா ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக தற்போது ஒவ்வொரு ஐபிஎல் அணிகளுமே இந்திய பயிற்சியாளர்களை கொண்டு வரும் முடிவுக்கு வந்துள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து விலகிய ராகுல் டிராவிட்டை பல்வேறு ஐபிஎல் அணிகளும் தங்களது அணியும் பயிற்சியாளராக வரும்படி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் ராகுல் டிராவிடுடன் டெல்லி அணியின் உரிமையாளர் பரத் ஜிந்தால் கங்குலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேபோன்று மும்பை அணியின் நிர்வாகமும் ராகுல் டிராவிடை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இன்னொரு புறம் பஞ்சாப், ராஜஸ்தான் என இரண்டு அணிகளை சேர்ந்த உரிமையாளர்களும் ராகுல் டிராவிடிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் நடந்த அந்த சம்பவத்தால் தான் பாண்டியா கேப்டன்ஷிப்பை பறிச்சுட்டாங்க.. ரசல் அர்னால்ட் வெளிப்படை
அதன் காரணமாக நிச்சயம் ஏதாவது ஒரு ஐபிஎல் அணிக்கு அவர் பயிற்சியாளராவது உறுதி ஆனால் அவர் எந்த அணியுடன் பணியாற்றுவது மெகா ஏலத்தின் போது வீரர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை கணித்த பிறகே முடிவை எடுப்பார் என்றும் அவர் ராஜஸ்தான் அணிக்காக பயிற்சியாளராக செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



