- Advertisement -
ஐ.பி.எல்

6 ஆவது இந்திய வீரராக தேவையில்லாத மோசமான சாதனையில் இணைந்த அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடிய வேளையில் இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மோசமான சாதனையில் இணைந்த அர்ஷ்தீப் சிங் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 39 ரன்களையும், ஜாஸ் பட்லர் 38 ரன்களையும் குவித்தனர். பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது :

- Advertisement -

19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கூப்பர் கானோலி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதேபோன்று துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 37 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அதாவது நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 42 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அவர் போட்டியின் 19-வது ஓவரை வீசியபோது தான் அந்த தேவையில்லாத மோசமான சாதனையை ஆறாவது இந்திய வீரராக அவர் நிகழ்த்தியிருந்தார். அதாவது அந்த 19-வது ஓவரில் 12 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் அந்த ஓவரை வீசி முடிக்க ஆறு பந்துகளுக்கு பதிலாக 11 பந்துகளை வீசியிருந்தார்.

இதையும் படிங்க : 6 ஆண்டுகால அசத்தலை சி.எஸ்.கே அணியுடன் இணைந்த போட்டியுடன் தவறவிட்ட சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

அந்த ஓவரில் ஒரு நோபால், நான்கு ஒயிடு மற்றும் 6 லீகல் டெலிவரி என மொத்தம் 11 பந்துகளை அவர் வீசியிருந்தார். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் ஹார்டிக் பாண்டியா, ஷர்துல் தாகூர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் 11 பந்துகளை வீசியிருந்த வேளையில் இந்த மோசமான பட்டியலில் ஆறாவது இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங்கும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -