ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த மார்ச் 30-ஆம் தேதி கௌகாத்தி நகரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் விளையாடியிருந்தது. இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு சரிவை சந்தித்த சஞ்சு சாம்சன் :
ஏற்கனவே கடந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடித்த சிஎஸ்கே அணியானது இம்முறையும் இந்த தொடரை மோசமான நிலையில் துவங்கி உள்ளதால் இந்த தொடரும் சிஎஸ்கே அணிக்கு ஒரு கடினமான தொடராக மாறலாம் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு தோனி வரும்வரை நிச்சயம் சிஎஸ்கே அணி இந்த சரிவிலிருந்து மீளாது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது சென்னை அணி சார்பாக விளையாடியிருந்த நட்சத்திர துவக்க வீரரான சஞ்சு சாம்சன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 6 ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் இம்முறை சி.எஸ்.கே அணியுடன் இணைந்துள்ளதால் அந்த அணிக்கு எதிராக அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததோடு மட்டுமின்றி கடந்த ஏழு ஆண்டுகளில் தான் விளையாடிய இந்த சீசனின் முதல் போட்டியில் பெரிய சறுக்களை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் அறிமுக போட்டியிலேயே அசத்தலான சாதனையை நிகழ்த்திய கூப்பர் கானோலி – விவரம் இதோ
அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அவர் குறைந்தது அரைசதமாவது கடந்துள்ளார். ஆனால் இம்முறை சி.எஸ்.கே அணியுடன் இணைந்த கையோடு தனது முன்னாள் அணிக்கு எதிராகவே அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்து சறுக்களை இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



