ஐ.பி.எல் அறிமுக போட்டியிலேயே அசத்தலான சாதனையை நிகழ்த்திய கூப்பர் கானோலி – விவரம் இதோ

Cooper Connolly
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அசத்தலான வெற்றியை பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அறிமுக போட்டியில் சாதனை நிகழ்த்திய கூப்பர் கானோலி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவிக்க பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19. 1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான கூப்பர் கானோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கி 44 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருவதோடு அவர் மீதான கவனத்தையும் அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் கூப்பர் கானோலி அடித்த 72 ரன்கள் மூலம் ஐபிஎல் அறிமுகப்போட்டியில் அசத்தலான சாதனை ஒன்றியையும் நிகழ்த்தியுள்ளார். அதாவது வெளிநாட்டு வீரர்களில் தங்களது அறிமுக ஐபிஎல் போட்டியில் அரைசதத்திற்கு மேல் கடந்த வீரர்களாக 4 பேர் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : வெற்றி பெற்றாலும் முதல் போட்டியிலேயே தண்டனை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் – என்ன நடந்தது?

பிரெண்டன் மெக்கல்லம், மைக்கல் ஹஸ்ஸி, ஷேன் மார்ஷ், கைல் மேயர்ஸ் ஆகிய நான்கு வீரர்கள் இருந்த வேளையில் தற்போது ஐந்தாவது வீரராக கூப்பர் கானோலி தனது அறிமுக போட்டியிலே அரைசதம் கடந்துள்ளார். அதோடு இந்த போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் அறிமுக போட்டியிலேயே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement