இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு விதிக்கப்பட்ட அபராதம் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 39 ரன்களையும், ஜாஸ் பட்லர் 38 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக கூப்பர் கோனாலி ஆட்டமிழக்காமல் 72 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 37 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : நேற்றைய போட்டின் போது குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யும்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பீல்டிங் மாற்றங்களை செய்து குஜராத் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.
இதையும் படிங்க : அந்த பையன் மீது இப்போவே அழுத்தத்தை போடாதீங்க.. அவன் பொறுமையா வரட்டும் – அஷ்வின் ஓபன்டாக்
இதன் காரணமாக பந்து வீசுவதற்கு போதிய நேரத்தை விட கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தண்டனையை பெற்றுள்ளார். மேலும் இவர் இரண்டு முறை இதேபோல் தவறு செய்தால் ஒரு போட்டியில் பங்கேற்க தடையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



