- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே ஓவரில் 7 ஒய்ட் 13 பந்துகள்.. மோசமான உலக சாதனை சமன் செய்த அர்ஷ்தீப்.. கடுப்பான கம்பீர்.. டீ காக் அசத்தல்

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக 2வது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி புதிய சண்டிகரில் உள்ள முல்லான்பூரில் இரவு 7.00 மணிக்குத் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு குவின்டன் டீ காக் இந்தியாவை அதிரடியாக எதிர்கொண்டார். மறுபுறம் தடுமாறிய ரீசா ஹென்றிக்ஸ் 8 ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்டானார். இந்த பக்கம் தொடர்ந்து அசத்திய டீ காக் 26 பந்துகளில் அரை சதமடித்தார். எதிர்புறம் வந்த கேப்டன் மார்க்ரம் தடுமாற்றமாக விளையாடி 29 ரன்னில் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டானார்.

- Advertisement -

டீ காக் அசத்தல்:

மறுபுறம் பட்டாசாக விளையாடிய டீ காக் 5 பௌண்டரி 7 சிக்ஸருடன் சதத்தை நெருங்கிய போது 90 (46) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். மிடில் ஆர்டரில் தேவால்டு ப்ரேவிஸ் 14 (10) ரன்னில் அக்சர் பட்டேல் சுழலில் அவுட்டானாலும் டேவிட் மில்லர் 20* (12), பெரீரா 30* (16) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 213/4 ரன்கள் எடுத்து அசத்தியது.

முன்னதாக அப்போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய 10வது ஓவரின் முதல் பந்திலேயே குவிண்டன் டீ காக் அதிரடியான சிக்சரை பறக்க விட்டார். அதனால் பதற்றமடைந்த அர்ஷ்தீப் அடுத்தடுத்து 2 ஒய்டு பந்துகளை போட்டார். ஒரு வழியாக 3வது முயற்சியில் 2வது பந்தை சரியாகப் போட்ட அவர் 3வது பந்தை 4 முறை ஒய்டு பந்துகளாக போட்டுத் தள்ளினார்.

- Advertisement -

மோசமான உலக சாதனை:

அதனால் இந்திய ரசிகர்கள் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இவருக்கு என்னவாயிற்று? என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒருவழியாக 5வது முயற்சியில் 3வது பந்தை சரியாக போட்ட அவர் 4, 5வது பந்துகளையும் சரியாக போட்டு முடித்தார். அதனால் கடைசிப் பந்தையும் சரியாகப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஷ்தீப் ஒய்டு போட்டார். இறுதியில் கடைசி பந்தை சரியாக வீசிய அவர் 10 ஓவரில் மட்டும் 7 ஒய்டு உட்பட மொத்தம் 13 பந்துகளை வீசி 18 ரன்களை வாரி வழங்கினார்.

இதையும் படிங்க: நேரமும் வாய்ப்பும் கிடைச்சா.. கில் செய்யும் அந்த 2 வேலையையும் இந்தியாவுக்காக செய்வதே என் கனவு.. ஜெய்ஸ்வால்

அதைப் பார்த்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகவும் கடுப்பான ரியாக்சனை கொடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் (முழு உறுப்பினர் நாடுகள்) ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2024ஆம் ஆண்டு ஹராரே மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்கும் ஒரே ஓவரில் 13 பந்துகளை போட்டுள்ளார்.

- Advertisement -