
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு எதிரியான டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து இழந்த இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக மிகப்பெரிய தொடர் ஒன்றில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்தவகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டு 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது இந்த இங்கிலாந்து தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்துவார் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஐந்து போட்டியில் விளையாடியுள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹலை மிஞ்சி மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை :
80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் உள்ளார். அவரது இந்த சாதனையை நெருங்கியுள்ள அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாக இருந்தாலும் இதுவரை 60 போட்டியில் விளையாடி 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க : சச்சின் மாதிரி முடிவு ரோஹித் கையில் இருக்கு.. புஜாரா மாதிரி கோலி இதை செய்வது அவசியம்.. சஞ்சய் மஞ்ரேக்கர்
இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சாஹலின் சாதனையை முறியடிப்பார். அதுமட்டும் இன்றி 5 விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளராகவும் வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.