ஸ்விங் வேற லெவலில் பண்றாரு, பும்ரா போல 3 வகையான கிரிக்கெட்டிலும் அவர் அசத்துவாரு – கவாஸ்கர் பாராட்டு

Sunil-gavaskar
- Advertisement -

2023 புத்தாண்டில் இதுவரை இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய டி20 கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் அரஷ்தீப் சிங் நோ-பால்களை சரமாரியாக போட்டு தள்ளியது தோல்வியை கொடுத்தது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் ஹாட்ரிக் நோ-பால் உட்பட 5 நோ-பால்களை வீசி மோசமான உலக சாதனை படைத்து வெற்றியை எதிரணிக்கு பரிசாக கொடுத்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் கடைசி ஓவரில் நோ-பால் உட்பட 27 ரன்கள் கொடுத்து வெற்றியை தாரை வார்த்தார். 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி விளையாடினார்.

Arshdeep Singh 1

- Advertisement -

அதில் ஒவ்வொரு சீசனிலும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு முன்னேறிய அவர் 2022 சீசனில் பும்ரா போன்ற நட்சத்திர பந்து வீச்சாளர்களை மிஞ்சி டெத் ஓவர்களில் குறைவான ரன்களை கொடுத்து அனைவரது பாராட்டுகளை அள்ளினார். மேலும் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவுக்காக 2022 ஜூலை மாதம் அறிமுகமாகி அதே போன்ற நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக அவருக்கு முன்பாக அறிமுகமாகி வேகத்தை மட்டும் நம்பி ரன்களை வாரி வழங்கிய உம்ரான் மாலிக் அதிரடியாக 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார்.

பும்ரா மாதிரி:
ஆனால் ஆரம்பம் முதலே நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றி அசத்திய காரணத்தால் ஆஸ்திரேலிய நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தேர்வாகி அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் ஜாஹீர் கானுக்கு பின் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின் லேசான காயத்தை சந்தித்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த காரணத்தால் ரிதத்தை இழந்த அவர் தற்போது நோ-பால்களை வீசி தடுமாறி வருகிறார்.

Arshdeep Singh

மொத்தத்தில் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரை தவிர்த்து நோ-பால் பிரச்சனை தவிர்த்து இப்போதும் அவர் தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஆரம்பத்தில் அனைவருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் அறிமுகமாகி இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு செய்யாத அவர் இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேறுவார் என்றும் நம்பலாம். இந்நிலையில் வெள்ளைப் பந்திலேயே பெரும்பாலான போட்டிகளில் ஸ்விங் செய்யும் அரஷ்தீப் சிங் அதிகம் ஸ்விங் ஆகக்கூடிய சிவப்பு பந்தை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா போல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அனைத்து நேரங்களிலும் வருங்காலத்தில் அவர் அசத்துவார் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவரிடம் நல்ல பவுன்சர் மற்றும் யாரக்கர் பந்துகளை வீசும் திறமை உள்ளது. அவர் நிச்சயமாக பெரிய அளவில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வெள்ளை பந்திலேயே இந்த அளவுக்கு ஸ்விங் செய்யக்கூடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு நிற பந்தை எந்த அளவுக்கு செய்வார் என்பதை நினைத்து பாருங்கள்”

sunil-gavaskar

“மேலும் இடது கை பந்து வீச்சாளராக இருக்கும் அவர் இந்திய பந்து வீச்சு கூட்டணியில் பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்துவார். அவரிடம் நல்ல வேகம் மற்றும் பந்தை ஸ்விங் செய்யும் திறமையும் உள்ளது. பும்ரா முதலில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகி மிகச் சிறப்பாக செயல்பட்டு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக உருவெடுத்தார். அதே திறமையை அரஷ்தீப் கொண்டுள்ளார் என்பதால் அவர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நியாயத்தையும் நம்பிக்கையையும் இந்தியாவிடம் எதிர்பார்க்கக் கூடாது – ஸ்மித், கவாஜாவை தொடர்ந்து இயன் ஹீலி நேரடி தாக்கு

அதாவது வித்தியாசமான ஆக்சனுடன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் பும்ரா அறிமுகமான போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற கருத்துக்கள் நிலவியது. ஆனால் அதை உடைத்த அவர் வெற்றிகரமாக செயல்படுவது போல் இவரும் அசத்துவார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement