- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீர் அவரை கழற்றி விட்டா இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. ராணாவை ஆஸி நொறுக்கிட்டாங்க.. பின்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் மீண்டும் அர்ஷ்தீப் சிங் கழற்றி விடப்பட்டு ஹர்ஷித் ராணா விளையாட வைக்கப்பட்டது இந்தியாவுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அர்ஷ்தீப் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் இந்தியாவுக்காக 100 டி20 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இருப்பினும் 8வது இடத்தில் விளையாடும் பவுலர் பேட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவரை கழற்றி விட்டுள்ள கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த ராணாவை சேர்த்துள்ளார்.

- Advertisement -

தவறான முடிவு:

இந்நிலையில் ராணாவை 2வது போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். மேலும் அர்ஷ்தீப் சிங்கை கழற்றி விட்டு இந்தியாவால் வெற்றி பெற முடியாது என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் இருக்க வேண்டும். அடுத்த போட்டியில் அவர் சேர்க்கப்பட்டால் அது எனக்கு ஆச்சரியமளிக்காது”

“டி20 கிரிக்கெட்டில் ஒரு விஷயத்தை நான் கற்றுக்கொண்டுள்ளேன். அதாவது நீங்கள் அதிகப்படியான பேட்ஸ்மேன்களுடன் விளையாடினால் சில நேரங்களில் பொறுப்பு நீர்த்துப்போகும். ஏனெனில் நாம் அவுட்டானாலும் நிலைமையை சமாளிக்க மற்றொரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று பேட்ஸ்மேன்கள் நினைப்பார். ஆனால் குறைவான பேட்ஸ்மேன்னுடன் விளையாடும் போது அனைவரும் அமைந்து விளையாடுவார்கள்”

- Advertisement -

பின்ச் விமர்சனம்:

“இந்தியா உலகக் கோப்பையை மனதில் வைத்து வெற்றி பெறுவதற்கு தேவையான சேர்க்கையை இந்தத் தொடரில் கண்டறிய முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக வீசியது ஆஸ்திரேலியா ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக இருந்தது. ஆனால் அதன் பின் ஹர்ஷித் ராணா அடித்து நொறுக்கப்பட்டார். டிராவிஸ் ஹெட் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு சேதத்தை உண்டாக்கினார்”

இதையும் படிங்க: நோட் பண்ணிக்கோங்க.. இந்திய அணியின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் இவர்தான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

“பின்னர் மிட்சேல் மார்ஷ் சேர்ந்து அடித்தார். இந்தியா அதிக ரன்கள் அடிக்காததால் அவர்களின் பவுலர்களால் இலக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்கள் அடித்திருந்தால் முடிவு மாறியிருக்கலாம்” என்று கூறினார். அத்துடன் அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -