மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பூஜ்யத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியானது தற்போது டி20 தொடரின் போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களை மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் இவர்தான் : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஒருபுறம் இந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தார்.
அவரது இந்த பயம் அறியாத அற்புதமான ஆட்டம் பலரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் அபிஷேக் ஷர்மா தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை பாராட்டி சமூக வலைதளத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் உண்மையிலேயே நம்புகிறேன். இந்தியாவின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் அபிஷேக் சர்மாதான். ஏனெனில் அவரிடம் பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. இனிவரும் போட்டிகளில் அவர் சவாலை மட்டுமே தான் எதிர்கொள்ளப் போகிறார். பிரச்சனை என்பது மிகப்பெரிய வார்த்தை.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது அபிஷேக் சர்மா நிறைய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. ஏற்கனவே பிரைன் லாராவிடம் அவர் நிறைய ஆலோசனைகளை பெற்றுள்ளார். பிரைன் லாராவும் அபிஷேக் சர்மாவால் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்த விடயத்தை நோட் பண்ணீங்களா? உடனடியா சுப்மன் கில் மீது நடவடிக்கை எடுங்க – இர்பான் பதான் கருத்து
அந்த வகையில் தற்போது மிகச்சிறந்த பேட்டிங் ஸ்கில்லுடன், நல்ல டெக்னிக்குடன் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். அவர் மட்டும் அதிரடியாக விளையாடுவதோடு சேர்த்து தொடர்ச்சியான ரன்களை குவித்தால் நிச்சயம் இன்னும் வெகு தூரம் இந்திய அணியில் பயணிப்பார் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



