வயசாகிடுச்சு.. மெதுவா ஓடுவாருன்னு நினைக்காதீங்க – 2023 உ.கோ தொடரில் அதை செய்ய அஸ்வின் தேவை – அர்ஜுனா ரணதுங்கா ஆதரவு

Arjuna Ranatunga 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்த இந்தியா அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜூனியர் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிலும் கடந்த 2022 ஜனவரிக்கு பின் எந்த விதமான ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் பலருக்கு ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். எனவே எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிப்பதற்கு ஆஃப் ஸ்பின்னர் அவசியம் என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ரணதுங்கா ஆதரவு:
ஆனாலும் 2 வருடங்களாக விளையாடாத அவரை திடீரென தேர்வு செய்ததற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் வயதால் சற்று மெதுவாக ஓடினாலும் 2023 கோப்பை வெல்வதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான வீரர் என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் கேப்டன் அர்ஜுனர் ரணதுங்கா கூறியுள்ளார்.

குறிப்பாக குல்தீப் யாதவால் மட்டும் தனி ஸ்பின்னராக விக்கெட்டுகளை எடுத்து விட முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் 2 முதன்மையான ஸ்பின்னர்கள் இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களிடம் சுழல் பந்துகளை வீசும் நல்ல ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். இருப்பினும் இந்திய ஆடுகளங்களில் அவர்களிடம் வலுவான ஸ்பின்னர்கள் இல்லாமல் போனால் அது பின்னடைவை ஏற்படுத்தும்”

- Advertisement -

“அங்கே இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய குல்தீப் யாதவ் மேட்ச் வின்னராக இருப்பதை நான் அறிவேன். இருப்பினும் அவருக்கு ஆதரவாக இன்னொரு ஸ்பின்னர் தேவை. ஏனெனில் அவரை சில எதிரணிகள் அட்டாக் செய்யும் முயற்சிக்கலாம். மேலும் இந்திய அணியில் பந்து வீசும் பேட்ஸ்மேன்கள் இல்லை. இந்தியா அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்களை பார்க்கின்றனர்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் ஏன் சேர்க்கப்படவில்லை? – ரோஹித் சர்மா பதில்

“ஆனால் 11 பேர் அணியில் இல்லையென்றாலும் அஸ்வின் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் விளையாடும்போது உங்களுக்கு மேட்ச் வின்னராக இருப்பார். அவர் தற்போது சற்று வயதானவராக களத்தில் மெதுவாக ஓடுபவராக இருக்கலாம். இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்களை எடுக்க உங்களுக்கு அவரைப் போன்ற ஒருவர் தேவை” என்று கூறினார்.

Advertisement