IPL 2023 : என்னைக்குமே சச்சின் அளவுக்கு வரமுடியாது – அர்ஜுன் பற்றி ஆரம்பத்திலேயே வாயை விட்டு விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

Arjun-Tendulkar-1
- Advertisement -

இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறும் இடமாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு வழியாக வாய்ப்பு பெற்று விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அவர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நாட்டுக்கு விளையாட வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசைக்கிணங்க பயிற்சிகளை துவங்கி கடந்த சில வருடங்களாக மும்பை அணியில் நெட் பவுலராக செயல்பட்டு வந்தார்.

Arjun Tendulkar 1

- Advertisement -

அதைத்தொடர்ந்து கடந்த வருடம் நேரடியாக ஏலத்தில் வாங்கப்பட்ட அவருக்கு மும்பை தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நழுவ விட்டதால் கடைசி சில சம்பிரதாயப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஜாம்பவானின் மகன் விரைவாக வாய்ப்பு பெற்று விட்டார் என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அவர் கடந்த வருடம் மும்பையிலிருந்து வெளியேறி ரஞ்சிக் கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி முதல் முறையாக சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

சச்சின் அளவுக்கு வரமுடியாது:
அதனால் தற்போது நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் இத்தொடரில் அறிமுகமாகி ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை பதிவு செய்தது ரோகித், சச்சின் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனாலும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனுடன் வேகமாக ஓடி வரும் அவர் சராசரியாக 110 – 120 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசுவதால் அந்த இடத்தில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிங்கு சிங் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் கூட சரமாரியாக அடித்திருப்பார்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Arjun Tendulkar

அந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரின் ஆக்சன், லேண்டிங் என எதுவுமே சரியில்லாத காரணத்தால் பந்து வீச்சில் கூடுதல் வேகத்தை சேர்த்தால் மட்டுமே நீடித்து விளையாட முடியும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் முதல் நபராக வெளிப்படையாக விமர்சித்தார். இந்நிலையில் சச்சின் அளவுக்கு அர்ஜுன் வர முடியாது என்று தெரிவிக்கும் அவர் பேட்ஸ்மேனாக விளையாடினால் மும்பை அணியில் இடம் கிடைக்காது என்பதாலேயே ஆல் ரவுண்டராக விளையாடுவதாக கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு பேட்ஸ்மேனாக சச்சினின் பெஞ்ச்மார்க் மிகவும் உயரியதாகும். அவருடைய மகன் எந்த விதத்திலும் அந்த உச்சத்தை எட்ட முடியாது. மேலும் வாசிம் அக்ரம், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரை அர்ஜுன் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அவருடைய தந்தைக்கு எதிராக நிறைய பந்து வீசியிருக்கிறார்கள். அதே போல சச்சின் சிறப்பாக பேட்டிங் செய்யும் போது கங்குலி, சேவாக், டிராவிட் ஆகியோருக்கு கடினமாகவே வாய்ப்பு கிடைக்கும். எனவே அந்த தந்தை – மகன் ஜோடி சொந்த மண்ணில் விளையாடும் போது பெரும்பாலும் அர்ஜுன் பந்து வீசுபவராக இருந்திருப்பார்”

latif

“அதுவே அர்ஜுன் பவுலராக உருவெடுப்பதற்கான காரணமாக இருந்திருக்கலாம். அது வருங்காலத்தில் அவரின் வேலையை தீர்மானிப்பதில் ஒன்றாக இருந்திருக்கலாம். அதாவது அர்ஜுன் டெண்டுல்கர் ஆல் ரவுண்டராக இருப்பதாலேயே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுகிறார். ஒருவேளை அவர் பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க மாட்டார். ஏனெனில் அந்த அணியில் பேட்ஸ்மேன்களை விட ஆல் ரவுண்டர்களுக்கு தான் அதிக பஞ்சம் நிலவுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:விக்கெட் கீப்பிங் க்ளவுஸ்ஸோட நிக்குறது தான் நான் பண்ற தப்புனு நினைக்குறேன் – எம்.எஸ்.தோனி கலகலப்பு

முன்னாதாக ஆரம்ப காலங்களில் மட்டுமே இருக்கும் அர்ஜுன் கடினமாக உழைத்தால் நல்ல வீரராக வருவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த ரசித் லத்தீப் தற்போது என்ன இருந்தாலும் சச்சின் அளவுக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். வரலாற்றில் ரோகன் கவாஸ்கர், ஸ்டூவர்ட் பின்னி போன்ற நிறைய ஜாம்பவான்களின் மகன்கள் சுமாராக செயல்பட்டு காணாமல் போன நிலையில் அர்ஜுன் பற்றி ஆரம்பத்திலேயே வாயை விட்டுள்ள இவருடைய கருத்து மும்பை ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Advertisement