விக்கெட் கீப்பிங் க்ளவுஸ்ஸோட நிக்குறது தான் நான் பண்ற தப்புனு நினைக்குறேன் – எம்.எஸ்.தோனி கலகலப்பு

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

Moeen Ali

- Advertisement -

அதன்படி நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை என்றாலும் கீப்பிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

MS Dhoni 2

குறிப்பாக நேற்றைய போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் மற்றும் ஒரு ரன்அவுட் என அனைத்து விதத்திலும் அற்புதமாக செயல்பட்ட தோனி பரிசளிப்பு விழாவின் போது பேசிய ஒரு விடயம் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் மார்க்ரம் கேட்சை பிடித்த அவர் அந்த கேட்சுக்கு பெஸ்ட் “கேட்ச் ஆஃப் தி மேட்ச்” அவார்ட் கிடைக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இதுவரை எனக்கு பெஸ்ட் கேட்ச் விருது வழங்கப்படவில்லை. அதற்கு நான் தவறான இடத்தில் கேட்ச் பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் கீப்பிங் கிளவுஸ் போட்டுக்கொண்டு கேட்ச் பிடிப்பதால் தான் எனக்கு இந்த அவார்ட் வழங்கப்படுவதில்லை என்று நினைப்பதாக கலகலப்பாக பேசினார்.

இதையும் படிங்க : LSG vs GT : கடைசி வரை தடவலாகவே செயல்பட்ட கேஎல் ராகுல் – வெற்றியை வெற்றிலை பாக்கு வைத்து குஜராத்துக்கு கொடுத்த பரிதாபம்

அதோடு நான் பிடித்த கேட்ச் மிகவும் சிறந்த கேட்ச். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ராகுல் டிராவிட் இதேபோன்று ஒரு கேட்சை பிடித்திருக்கிறார். நல்ல அனுபவம் இருந்தால் இதுபோன்ற கேட்ச்களை எளிதாக பிடிக்கலாம் என்றும் தோனி கலகலப்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement