இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதும் அனுஷ்கா சர்மா பகிர்ந்த மெசேஜ் – விவரம் இதோ

Anushka-Sharma
- Advertisement -

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கிய 13-வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வர இருக்கிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அந்தவகையில் தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணி 14 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தாங்கள் விளையாடிய 7 போட்டியிலுமே வெற்றி பெற்று ஒன்றில் கூட தோற்காமல் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கான போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்து தற்போது நல்ல ரன் ரேட் உடன் முதலிடம் வகிக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி இரண்டு லீக் போட்டிகளில் (தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து) விளையாடினாலும் தற்போதே அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு சென்றதை அடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இந்திய அணியை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் : “திஸ் டீம்” என்று குறிப்பிட்டு நீல நிற ஹார்டின் எமோஜியை பதிவு செய்து இந்திய அணி அரையிறுதிக்கு நுழைந்ததில் மிகவும் மகிழ்ச்சி எனது வாழ்த்துக்கள் என அவர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலககோப்பைக்கு தேர்வான 2 கத்துக்குட்டி அணிகள் – மொத்தம் எத்தனை டீம் தெரியுமா?

அவர் பகிர்ந்த இந்த மெசேஜ் தற்போது இணையத்தில் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே இந்திய அணி எங்கு சென்று விளையாடினாலும் அங்கு விராட் கோலியுடன் பயணிக்கும் அனுஷ்கா சர்மா மைதானத்தில் இருந்து தனது ஆதரவை தெரிவித்து வரும் வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டியிலும் அவர் நேரில் வந்து இந்திய அணியை உற்சாகப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement