நீங்கள் கடவுளின் குழந்தை.. விராட் கோலியின் 50 ஆவது சதத்திற்கு பிறகு – அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு

Anushka-and-Kohli
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 ஆவது சதத்தை விளாசி சச்சினின் அதிக சதங்கள் சாதனையை முறியடித்தார். அவரது இந்த பிரமாதமான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டது.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 113 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 117 ரன்கள் குவித்து அசத்தார். இந்த உலகக் கோப்பை தொடரிலேயே விராட் கோலி 50-ஆவது சதத்தை அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நேற்று சச்சின் டெண்டுல்கர் முன்பே அந்த சாதனையை நிகழ்த்தி அவருக்கும் மரியாதையும் செலுத்தினார்.

விராட் கோலியின் இந்த 50-ஆவது சதத்திற்கு அனைவரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியை மைதானத்தில் நேரில் கண்ட விராட் கோலியின் மனைவி போட்டி முடிந்த பிறகு அவரது 50-ஆவது சதம் குறித்த சில உருக்கமான கருத்துக்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : கடவுள் ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளர். உங்கள் அன்பால் அவர் என்னை ஆசீர்வதித்ததற்கும், நீங்கள் ஒவ்வொரு படியாக வலிமையாக இப்படி வளர்ந்து நிற்பதை பார்ப்பதற்கும் நன்றி. உங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யுங்கள் விளையாட்டுக்கு எப்போதும் நேர்மையாக இருங்கள்.

இதையும் படிங்க : உங்களுக்கு நான் சொல்லாம எப்படி. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த – நரேந்திர மோடி

நீங்கள் கடவுளின் சொந்த குழந்தை என அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் முறியடிக்க முடியாத பல சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்து வரும் விராட் கோலி தற்போதே லெஜெண்ட் இடத்தை எட்டியுள்ளார் என்றே கூறலாம்.

Advertisement