IND vs AUS : அனுஷ்கா நெகிழ்ச்சி – உடல் சரியில்லாத போதும் 2016க்குப்பின் மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடிய கிங் கோலி

Virat Kohli Anushka
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டியில் வென்றாலும் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கிய 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 480 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும் கேமரூன் கிரீன் 124 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் 6 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்கள் அவுட்டான நிலையில் 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களுடன் இணைந்து நிதானமாக பேட்டிங் செய்த தொடக்க வீரர் சுப்மன் கில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் சதமடித்து 128 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து விராட் கோலியுடன் 4 மற்றும் 5வது விக்கெட்டுக்கு முறையே 64, 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎஸ் பரத் ஆகியோர் தங்களது பங்கிற்கு முறையே 28 ரன்களும் 44 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

மேஜிக் நிகழுமா:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி என்னதான் பிட்ச் பிளாட்டாக இருந்தாலும் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு மதிப்பு கொடுத்து வெறும் 5 பவுண்டரியுடன் 2019க்குப்பின் 40 மாதங்கள் 1205 நாட்கள் கழித்து ஒரு வழியாக தன்னுடைய 28வது சதத்தை விளாசி நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் சதமடித்ததும் விரைவாக ரன்களை சேர்க்க முயற்சித்த அவருடன் கை கொடுத்த அக்சர் படேலும் அரைசதம் கடந்த பின் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் அக்சர் பட்டேல் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 7, உமேஷ் யாதவ் 0 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை சேர்க்கும் முயற்சியில் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 15 பவுண்டரியுடன் 186 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 571 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் மற்றும் டோட் முர்பி தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா 4வது நாள் முடிவில் 3/0 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் கடைசி நாளில் முடிந்தளவுக்கு அந்த அணியின் 10 விக்கெட்களையும் எவ்வளவு விரைவாக இந்தியா எடுக்கிறதோ அந்தளவுக்கு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாகும். ஆனால் பிளாட்டான பிட்ச்சில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு ஒரு கட்டத்தில் டிக்ளேர் செய்து சுலபமாக எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி டிராவில் முடிவடைவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

இருப்பினும் கடைசி நாளில் ஏதேனும் ஒரு வீரர் மேஜிக் நிகழ்த்தும் பட்சத்தில் வெற்றி இருதரப்புக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த மேஜிக்கை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா நிகழ்த்தி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இதர அணிகளின் கையை எதிர்பாராமல் தகுதி பெறுமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக இப்போட்டியில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி லேசான காய்ச்சலுடன் உடல் சரியில்லாத நிலையுடன் விளையாடியது தம்மை உத்வேகமடைய வைப்பதாக அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதையும் படிங்க:BAN vs ENG : டி20 உலக சாம்பியன் இங்கிலாந்தை அதிர விட்ட வங்கதேசம், மோசமான வரலாற்றை மாற்றி எழுதி புதிய சரித்திர சாதனை

இருப்பினும் விமர்சனங்களை தூளாக்குவதற்காக சுமாரான உடல் நிலையிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 364 பந்துகளை எதிர்கொண்டு தனது கேரியரில் 2வது மிகப்பெரிய மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடி இப்போட்டியில் இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த பட்டியல்:
1. 366 பந்துகள் (211 ரன்கள்) : நியூசிலாந்துக்கு எதிராக, இந்தூர், 2016
2. 364 பந்துகள் (180 ரன்கள்) : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அகமதாபாத், 2023*
3. 340 பந்துகள் (235 ரன்கள்) : இங்கிலாந்துக்கு எதிராக, மும்பை, 2016

Advertisement