BAN vs ENG : டி20 உலக சாம்பியன் இங்கிலாந்தை அதிர விட்ட வங்கதேசம், மோசமான வரலாற்றை மாற்றி எழுதி புதிய சரித்திர சாதனை

BAN vs ENg
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் சிறப்பான வெற்றி பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. இருப்பினும் அத்தொடரிலேயே கடைசி போட்டியில் வென்று ஒய்ட் வாஷ் அவமான தோல்வியை தவிர்த்த வங்கதேசம் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் வெற்றி பதிவு செய்து சாதனை படைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி மார்ச் 12ஆம் தேதியன்று தாக்காவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு டேவிட் மாலன் 5 (8) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுக்க மற்றொரு தொடக்க வீரர் பிலிப்ஸ் சால்ட் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (19) ரன்களில் சாகிப் அல் ஹசனிடம் ஆட்டமிழந்தார். அதை பயன்படுத்திய வங்கதேசம் கேப்டன் ஜோஸ் பட்லர் 4 (6), சாம் கரண் 12 (16), மொய்ன் அலி 15 (17) என முக்கிய வீரர்களை அதிரடி காட்ட விடாமல் சொற்ப ரன்களில் காலி செய்தது.

- Advertisement -

வரலாறு படைத்த வங்கதேசம்:
அதனால் 91/5 என சரிந்த இங்கிலாந்தை மீட்டெடுக்க போராடிய பென் டூக்கெட் அதிகபட்சமாக 28 (28) ரன்கள் எடுக்க டெயில் எண்டர்களையும் வங்கதேச பவுலர்கள் சொற்ப ரன்களில் காலி செய்தனர். அதனால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 118 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் 9, தாலுக்தார் 9 என தொடக்க வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து இங்கிலாந்து போராடியது.

ஆனாலும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் நஜ்முல் சாண்டோ 46* (47), மெகதி ஹசன் 17 (18), ஹ்ரிடோய் 17 (18) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டாமலேயே எடுத்த கணிசமான ரன்கள் வங்கதேசத்தின் வெற்றியை உறுதி செய்தது. அதனால் 18.5 ஓவர்களிலேயே 120/6 ரன்கள் எடுத்த வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக உலக டி20 சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்தை அசால்டாக தோற்கடித்துள்ள வங்கதேசம் அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக ஒரு டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதை விட கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் கூட வெற்றி பெறாமல் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. ஆனால் அந்த மோசமான வரலாற்று தோல்விகளுக்கு முதல் முறையாக முற்றுப்புள்ளி வைத்துள்ள வங்கதேசம் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று சரித்திரத்தை மாற்றி எழுதி புதிய வரலாறு படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இதையும் படிங்க:
IND vs AUS : திறமை, டெக்னிக் எல்லாமே கச்சிதமாக இருக்கு, ஈஸியா 15000 ரன்கள் அடிப்பாரு – இளம் இந்திய வீரர் மீது கவாஸ்கர் நம்பிக்கை

முன்னதாக கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்ய உதவிய அதே மெகதி ஹசன் இப்போட்டியிலும் 4 விக்கெட்டுகள் மற்றும் 20 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தி ஆட்டநாயகன் விருது வென்று இங்கிலாந்தை அதிர வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாயக் கடைசி போட்டி மார்ச் 14ஆம் தேதியன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement