அந்த சவாலை சந்திக்கும் அஸ்வினோட அருமை இப்போ தெரியாது.. அந்த சாதனையும் உடைக்கணும்.. வாழ்த்திய கும்ப்ளே

Anil Kumble 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் கடைசி போட்டியில் விளையாடுகிறது. அதில் நட்சத்திர அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2011இல் அறிமுகமாகி இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் இந்தியாவின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் வெளிநாட்டில் 4வது பவுலர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும் என்ற நிலையால் அஸ்வினுக்கு வெளிநாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாழ்த்திய கும்ப்ளே:
ஆனால் தம்முடைய காலத்தில் இந்த பிரச்சனையை பெரியளவில் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கும் கும்ப்ளே அதனாலயே அஸ்வின் 100வது போட்டியில் விளையாட இவ்வளவு தாமதமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் தடைகளை கடந்து 100வது போட்டியில் விளையாடும் அஸ்வின் தனது 619 விக்கெட்டுகள் சாதனையை உடைத்து அசத்த வேண்டுமென்று வாழ்த்து தெரிவிக்கும் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அவர் தன்னுடைய கேரியரை சற்று தாமதமாக துவங்கினார். நான் முன்னதாகவே துவங்கினேன். மற்றபடி எங்கள் இருவருக்கும் கண்ணாடியை போன்ற ஒற்றுமைகள் இருக்கின்றன. என்னுடைய பார்வையில் அவர் முன்னதாகவே 100வது போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். இருப்பினும் சில காரணங்களுக்காக வெளிநாட்டு போட்டிகளில் இந்தியா அவரை தேர்ந்தெடுக்கவில்லை. நானும் இதை சந்தித்துள்ளேன்”

- Advertisement -

“ஆனால் அவர் சந்தித்துள்ள சவால் முற்றிலும் வித்தியாசமானது. நாம் தற்போது 4வது பவுலர் இடத்தில் மேட்ச் வின்னராக செயல்படக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. என்னுடைய காலத்தில் நாங்கள் எப்போதும் 4 பவுலர்களை விளையாடுவோம். ஆனால் தற்போது 5 பவுலர்களை வைத்து விளையாடும் நீங்கள் அதில் 2 ஸ்பின்னர்கள் வேண்டாம் என்று நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவருடைய அருமையை அஸ்வின் ஓய்வுக்குப் பின்பே உணர்வோம் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 2 வருஷம் கழிச்சு வரேன்.. அதை மட்டும் செய்ங்க.. கப் மும்பைக்குத் தான்.. ரசிகர்களுக்கு பாண்டியா வேண்டுகோள்

“500 விக்கெட்டுகளை மற்றொருவர் எடுத்துள்ளதை பார்ப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. இன்னும் வலுவாக விளையாடும் அஸ்வின் என்னுடைய சாதனையையும் (619 விக்கெட்டுகள்) முந்துவதற்கு தேவையான திறமைகளைக் கொண்டுள்ளார். ஒரு மேட்ச் வின்னராக சிறப்பாக செயல்படும் அவரது திறமை, இத்தனை ஆண்டுகளாக அவர் காட்டிய நிலைத்தன்மை போன்றவை சிறந்த அடையாளம். அதை செய்வது எளிதல்ல. குறிப்பாக இந்தியாவில் உங்களுடைய தரத்தை உயர்த்தி காட்டிய பின்பும் தொடர்ந்து அதே அளவுக்கு செயல்படுவது எளிதல்ல” என்று கூறினார்.

Advertisement