2 வருஷம் கழிச்சு வரேன்.. அதை மட்டும் செய்ங்க.. கப் மும்பைக்குத் தான்.. ரசிகர்களுக்கு பாண்டியா வேண்டுகோள்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்களை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறிய மும்பையை ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பின் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்தார். இருப்பினும் சமீப காலங்களில் தடுமாறும் அவரை கழற்றி விட்டுள்ள மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய கேப்டனாக அறிவித்தது.

- Advertisement -

ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
அதற்கு மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் அந்த அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தி உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த சூழ்நிலையில் குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தது போல் மும்பைக்கும் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் 2 வருடங்கள் கழித்து மீண்டும் தம்மை வளர்த்த மும்பை அணிக்காக விளையாடுவது சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை கொடுப்பதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். எனவே இம்முறை மும்பை ரசிகர்கள் தமக்கு முழுமையான ஆதரவு கொடுத்தால் பதிலுக்கு கோப்பையை வென்று கொடுப்பேன் என்று பாண்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவுக்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆசீர்வாதமாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி வருவது அனைத்தும் துவங்கிய இடத்திற்கு வருவதைப் போன்ற உணர்வை கொடுக்கிறது. பரோடாவில் இருந்து மும்பை வந்த எனக்கு இந்த நகரம் வளர்ச்சியை கற்றுக் கொடுத்து என்னுள் அடக்கத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது”

இதையும் படிங்க: 100வது போட்டி எப்போவோ நடந்துருக்க வேண்டியது.. எனக்கு மட்டும் ஏமாற்றம்.. கும்ப்ளேவுக்கு அஸ்வின் ஆதங்க பதில்

“இந்த நகரம் அன்பு மற்றும் பாடங்களை கற்றுக் கொடுத்து இன்று ஒரு வீரராக இருக்கும் என்னை பட்டைத் தீட்டியது. மும்பை எப்போதும் சிறப்பாக இருப்பதற்கு உங்களுக்கு சவால் கொடுக்கும். தற்போது ஐபிஎல் தொடரில் நான் 2 வருடங்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளேன். இங்கே ரசிகர்களிடம் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கு தேவையான அதே ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். அந்த ஆதரவை உறுதியாகக் கொடுத்தால் ஒவ்வொரு ஆதரவாளரும் மகிழ்ந்திருக்கும் ஒரு சீசனை நான் உறுதி செய்வேன். இது நாம் அனைவரும் சேர்ந்து ரசிக்கும் பயணமாகும்” என்று கூறினார்.

Advertisement