- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில் வேண்டாம்.. ரோஹித்துக்கு பின் பும்ரா தான் கேப்டனாகனும்.. அந்த தகுதிப் போதாதா? கும்ப்ளே பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2022 ஜனவரி மாதம் விராட் கோலிக்கு பின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்தியா ஓரளவு நல்ல வெற்றிகளை பெற்றது. இருப்பினும் கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை கோட்டை விட்டது. அதே காரணத்தால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமான ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

அடுத்த கேப்டன்:

சொல்லப்போனால் ஆஸ்திரேலிய தொடரின் கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா மோசமான சாதனை படைத்தார். எனவே 37 வயதாகும் அவரை அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. ஆனால் அதற்கு முன்பாக ரோஹித் சர்மா மரியாதையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பின் சுப்மன் கில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்த டெஸ்ட் கேப்டனாக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக தகுதியானவர் என்றாலும் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அடிக்கடி காயத்தை சந்திக்கிறார். எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக சமீபத்திய செய்திகள் கூறுகின்றன.

- Advertisement -

கும்ப்ளே கருத்து:

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து கேப்டனாக 293 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தனியாளாக வெற்றி பெற வைத்ததாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். எனவே பும்ரா தான் கேப்டனாக தகுதியானவர் என்று கூறும் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ராவை கேப்டனாக நியமித்து அவருடைய ஃபிட்னஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் 2025 தொடரில் இருந்து வெளியேறிய தேவ்தத் படிக்கல்.. என்ன காரணம்? – மாற்று வீரராக இணைந்த கேப்டன்

“வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். நிறையக் காயங்களை சந்தித்துள்ள அவர் ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் இப்போது தான் ஐபிஎல் தொடரில் விளையாட வந்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி நான் பும்ராவை கேப்டனாக விளையாட ஆதரவளிப்பேன். அதற்கு தகுதியான அவருக்கு ஒருவேளை இங்கிலாந்தில் இடைவேளை தேவைப்பட்டால் துணைக் கேப்டன் தற்காலிகமாக ஓரிரு போட்டிகளில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -