IPL 2023 : அதிரடியா செயல்பட ஓப்பனிங் வேண்டாம், அந்த இடத்துல விளையாடுங்க – ரோஹித்துக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் 20 கிரிக்கெட் தொடராக ஜொலித்து வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் 10 அணிகளில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை அதிலிருந்து மீண்டெழுந்து 6வது கோப்பையை வெல்ல போராட உள்ளது.

MI Jaspirt Bumrah

- Advertisement -

இருப்பினும் பும்ரா காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் சூரியகுமார் யாதவ் நல்ல பார்மில் இருந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட வேண்டியது வெற்றிக்கு அவசியமாகிறது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் அதிரடியாக விளையாடி ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் கடந்த சீசனில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் 268 ரன்களை 19.14 என்ற மோசமான சராசரியில் எடுத்து சுமாராக செயல்பட்டது மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கும்ப்ளே கோரிக்கை:
ஆனால் சமீப காலங்களாகவே இந்தியாவுக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியான ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை தரும் அவர் அதை பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டாகி வருகிறார். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவதற்கு வழக்கமாக களமிறங்கும் ஓப்பனிங் இடத்திற்கு பதிலாக மிடில் ஆர்டரில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வித்தியாசமான யோசனை பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

Rohit

“அவர் சொல்ல வேண்டியதை சொல்ல பயப்பட வேண்டியதில்லை. அவர் தன்னைச் சுற்றி அதிகப்படியான அனுபவத்தை கொண்ட பயிற்சியாளர்களை கொண்டுள்ளார். அவர்களிடம் விவாதித்து இறுதியில் இது பற்றி அவர் தனது சொந்த முடிவாகவே எடுக்கலாம். அது தான் கேப்டனிடம் இருந்து நீங்களும் எதிர்பார்த்தீர்கள். குறிப்பாக 2017ஆம் ஆண்டு புதிய வீரர்களுடன் இருந்த மும்பை அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அவருடைய கேப்டன்ஷிப் சிறப்பானது. அதிலிருந்து தான் ஒரு உண்மையான கேப்டனின் பண்புகள் வெளிப்படும்”

- Advertisement -

“எனவே தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை மிடில் ஆர்டரில் அனுபவம் தேவைப்படுகிறது. அந்த இடத்தில் மும்பை அணியிடம் திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த இடத்தில் ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் விளையாடுவதை நாம் விரும்புகிறேன். குறிப்பாக 7 முதல் 15 வரையிலான முக்கியமான மிடில் ஓவர்களை அவரால் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்” என்று கூறினார்.

Kumble

முன்னதாக ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாற்றமாக செயல்பட்டு ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கிய பின்பு தான் வெற்றிகரமாக செயல்பட துவங்கினார். ஆனாலும் தற்போது 35 வயதை கடந்து 5 கோப்பைகளை வென்று மிகச் சிறந்த கேப்டனாகவும் வீரராகவும் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ரோகித் சர்மா அதை பயன்படுத்தி இம்முறை மிடில் ஆர்டரில் விளையாடினால் நல்ல அனுபவத்தை வெளிப்படுத்த முடியும் என்று அனில் கும்ப்ளே வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : இந்த டைம் அவங்க தான் முதல் முறையா கோப்பை ஜெயிக்க போறாங்க – புதிய அணி பற்றி ஜேக் காலிஸ் கணிப்பு

இருப்பினும் இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், தேவால்ட் பிரேவிஸ், டிம் டேவிட் போன்ற வீரர்கள் பெரும்பாலும் ஓபனிங் இடத்தில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கவில்லை. எனவே இஷான் கிசான் – ரோஹித் சர்மா ஆகியோர் தான் இந்த சீசனில் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement