IPL 2023 : இந்த டைம் அவங்க தான் முதல் முறையா கோப்பை ஜெயிக்க போறாங்க – புதிய அணி பற்றி ஜேக் காலிஸ் கணிப்பு

Kallis
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகள் 74 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக ஓவருக்கு ஓவர் அனல் பறக்கக்கூடிய ஐபிஎல் தொடரில் இந்த வருடம் அதிரடியாக செயல்பட்டு கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டாலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் கடந்த வருடம் அபாரமாக செயல்பட்டு முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் இந்த சீசனில் களமிறங்குகிறது.

IPL-2023

- Advertisement -

மறுபுறம் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக ஜொலிக்கும் மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் கடந்த வருடம் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்தது. அதனால் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று தங்களது ரசிகர்களை புத்துணர்ச்சியடைய வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள அந்த அணிகளுக்கு சவால் கொடுக்க வரலாற்றின் முதல் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் ஜோஸ் பட்லர் போன்ற தரமான வீரர்களுடன் கடந்த வருடம் ஃபைனலில் விட்ட கோப்பையை இம்முறை முத்தமிட போராட உள்ளது.

காலிஸ் கணிப்பு:
அதே போல் நீண்ட சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்று புள்ளி வைக்க இம்முறை ஐடன் மார்க்ரம் – நிதிஷ் ராணா ஆகிய வித்தியாசமான புதிய கேப்டன்கள் தலைமையில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா களமிறங்குகிறது. இந்த அணிகளுடன் தங்களது லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் பெங்களூரு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளும் போட்டி போட உள்ளன. இந்த தொடரில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடுவதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை கணிப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

MIvsDC

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய முதல் கோப்பையை வென்று நீண்ட கால கனவை நிஜமாக்கும் என முன்னாள் தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஜேக் காலிஸ் கணித்துள்ளார். அந்த அணிக்கு நிகராக கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்த மும்பை கொதித்தெழுந்து ஃபைனல் வரை வரும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எப்போதுமே ஐபிஎல் தொடரில் முதலில் எந்தந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை கணிப்பதே மிகவும் கடினமாகும். ஏனெனில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட சமமான பலத்துடன் போட்டி போடுகின்றன. ஆனால் இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று எனக்கு தோன்றுகிறது. அதில் டெல்லி ஃபைனலில் கோப்பையை வெல்லும்” என்று கூறினார்.

Kallis

இருப்பினும் இந்த வருடம் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தால் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஒரு காலத்தில் லீக் சுற்றை தொடுவதற்கே திண்டாடிய அந்த அணி சமீப காலங்களில் ரிக்கி பாண்டிங் பயிற்சியில் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. மேலும் ரிஷப் பண்ட் இல்லையென்றாலும் 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த அனுபவம் வாய்ந்த டேவிட் வார்னர் டெல்லி அணியை இந்த சீசனில் வழி நடத்துகிறார்.

இதையும் படிங்க:GT vs CSK : திடீரென கொட்டிய மழை, குஜராத் – சென்னை முதல் போட்டி நடக்குமா? பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

எனவே அக்சர் பட்டேல், ரோவ்மன் போவல், பிரிதிவி ஷா, குல்தீப் யாதவ் போன்ற திறமையான இளம் வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி முடிந்தளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று உறுதியாக நம்பலாம். இருப்பினும் ஜேக் காலிஸ் கணித்தது போல முதல் முறையாக கோப்பை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement