
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்று சாதனை படைத்தது. குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி சாய்த்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த தொடர்ச்சியானத் தோல்விகளை உடைத்த ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தது.
அந்த வெற்றியை எதிர்பார்த்ததைப் போலவே ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்தில் வெறித்தனமாக கொண்டாடினார்கள். அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தங்களுடைய ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாட ஆர்சிபி அணி தயாரானார்கள். அதற்காக பெங்களூருவில் திறந்தவெளி பேருந்தில் சென்று வெற்றியைக் கொண்டாட அவர்கள் முடிவு செய்தார்கள்.
இருப்பினும் அதற்கு போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு காவல்துறை மறுப்பு தெரிவித்து விட்டது. அதன் காரணமாக கர்நாடக மாநில முதலமைச்சரை சந்தித்த பெங்களூரு அணியினர் சின்னசாமி மைதானத்திற்கு சென்றனர். அங்கே ஆர்சிபி நிர்வாகத்தின் சார்பில் பெங்களூரு அணியினருக்கு பாராட்டு விழா நடந்தது.
அதைத் தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்களுடன் வெற்றியை சேர்ந்து பெங்களூரு அணி வீரர்கள் மைதானத்தில் கொண்டாடினார்கள். ஆனால் அதைப் பார்க்க மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் தடுமாறினார்கள். கடைசியில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டது.
அந்த நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் இயற்கை எய்தியது அனைவரையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஆர்சிபி கோப்பையை வென்றது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள் என்று பெங்களூருவை சேர்ந்த ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ஏனெனில் அன்றைய நாளில் தான் 11 ரசிகர்கள் இயற்கை எய்சியதாக அவர் சோகத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 நாள் கழிச்சு கொண்டாடுனா என்ன? 11 ரசிகர்கள் போக அவங்க 2 பேரும் தான் காரணம்.. மதன் லால் சாடல்
அந்த ரசிகர்கள் மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள கும்ப்ளே இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள். இன்று என்னுடைய இதயம் ஆர்சிபி வெற்றியைக் கொண்டாடும் போது தங்களுடைய வாழ்க்கையை இழந்தவர்களின் குடும்பத்திற்கு செல்கிறது. காயத்தைச் சந்தித்த சந்தித்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இது துன்பகரமானது” என்று கூறினார்.