- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த பாரத்தை சுமக்காம ரோஹித்தை பாத்து விளையாடுங்க.. ஸ்பின்னர்களிடம் தடுமாறும் கோலிக்கு.. கும்ப்ளே அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2025 சாம்பியன்ஸ் கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அந்தப் போட்டியில் 229 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 ரன்கள் குவித்தார். கில் நிதானமான சதத்தை அடித்து 101* ரன்களும் ராகுல் 41* ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 22 (38) ரன்களில் வங்கதேச ஸ்பின்னர் ரிஷத் ஹொசைனிடம் அவுட்டானார். இந்நிலையில் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக கடினமாக விளையாடுவதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். எனவே பாரத்தை எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக விளையாடினாலே அவரால் அசத்த முடியும் என்று கும்ப்ளே கூறியுள்ளார்.

- Advertisement -

தடுமாறும் கோலி:

இதே போல தடுமாற்றமாக இருந்த ரோஹித் சர்மாவை எடுத்துக்காட்டாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி போல நானும் தடுமாற்றமான காலங்களில் இருந்துள்ளேன். எனவே அதைப்பற்றி பேசலாம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி இவ்வளவு காலம் தடுமாற்றமாக விளையாடியதில்லை. அவர் தற்போது அதிகமாக முயற்சிக்கிறார் என்று நான் உணர்கிறேன்”

“அனைவரும் வெற்றியை நீங்கள் பறிக்கக்கூடிய வீரர் என்று உங்களைச் சொல்கிறார்கள். அவர் நம்முடைய அணியின் முக்கியமான நபர். அது போன்ற எதிர்பார்க்கும் அழுத்தமும் இருக்கும் போது அதை பூர்த்தி செய்வதற்காக திடீரென நீங்கள் அனைத்து முக்கியத்துவத்தையும் விட்டுவிட்டு கடினமாக முயற்சிக்க செய்வீர்கள். அதை செய்யும் போது நீங்கள் ரிலாக்ஸாக இருக்க முடியாது”

- Advertisement -

கும்ப்ளே அட்வைஸ்:

“கொஞ்சம் அதிகமாக கடினமாக முயற்சிக்கிறார் என்பது அவர் விளையாடிய விதத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டியதில்லை. ரோகித் சர்மா இங்கே வந்து சுதந்திரமாக விளையாடுகிறார். ஏனெனில் நமது அணியில் நிறைய பேட்டிங் இருப்பதுடன் அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதே போல விராட் கோலியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை: வினோதமான ஹெல்மெட் கேட்ச்சால்.. வெறும் 2 ரன்னில் 74 வருட வரலாறு படைத்த கேரளா

“அனைத்து வீரர்களுமே இது போன்ற சூழ்நிலைகளை தங்களது கேரியரில் கடந்து வந்திருப்பார்கள். ஆனால் விராட் கோலி கொஞ்சம் தமக்குத் தாமே அதிக அழுத்தத்தை போடுகிறார் என்று நினைக்கிறேன். அதை செய்யாமல் களத்திற்கு சென்று முடிவைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரத்துடன் தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய கோலி ஃபார்மில் இருக்கும் போது சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவார். ஆனால் தற்போது அதை செய்யாத அவர் ரன்கள் குவிப்பதற்கு அதிகமாக முயற்சிக்கிறார்” என்று கூறினார்.

- Advertisement -