பதிரானாவுக்கு பதிலாக 36 வயது ஓரங்கட்டப்பட்ட வீரரை அணியில் தேர்வு செய்த இலங்கை – மட்டமான செலெக்ஷன்

Pathirana-and-Mathews
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஐசிசி-யின் 13 வது 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளானது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சில நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய வேளையில் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் காயம் காரணமாகவும் சில வீரர்கள் அவ்வப்போது தங்களது அணியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடரில் தசுன் ஷனகா தலைமையில் இடம் பிடித்த இலங்கை அணியானது. ஏற்கனவே அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வணிந்து ஹஸரங்கா இல்லாமல் உள்ளே வந்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் முதல் நான்கு போட்டிகள் மட்டுமே முடிவடைந்த வேளையில் தற்போது காயம் காரணமாக மதீஷா பதிரானாவும் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 வயதான பதிரானா உலகக் கோப்பை தொடருக்கான அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனுபவ குறைவு காரணமாக இந்த உலகக் கோப்பையில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுயிருந்தார்.

- Advertisement -

இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த அவர் 90 மற்றும் 95 ரன்கள் என வாரி வழங்கியதால் அவர் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக இலங்கை அணி தேர்வு செய்த வீரரை தான் தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் சமீப காலமாகவே இலங்கை அணியில் இடம் பெறாமல் வெளியில் இருந்த 36 வயதான ஆல் ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸ்-ஸை தான் இலங்கை வாரியம் தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க : பிரேக் இல்லாத ட்ரெயின் மாதிரி.. என்னா வேகம்.. இந்திய அணிக்கு வாசிம் அக்ரம் ஓப்பனாக பாராட்டு

36 வயதான மேத்யூஸ் இலங்கை அணிக்காக 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,000 மேற்பட்ட ரன்களையும், 120 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இருப்பினும் சமீப காலமாகவே இலங்கை ஒதுக்கப்பட்ட வயது மூத்த இவரை ஏன் தேர்வு செய்தனர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement