இந்த தொடரில் அவங்க ஜெயிக்கலைன்னா தான் ஆச்சர்யம்.. முன்னாள் இங்கிலாந்து கோச் ஆண்டி ஃபிளவர்

Andy Flower
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் 12 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் இங்கிலாந்து வெல்லுமா அல்லது தங்களின் சொந்த மண்ணில் 2012க்குப்பின் தோல்வியை சந்திக்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் குவிக்கும் புதிய யுத்தியை இங்கிலாந்து கடைபிடித்து வருகிறது. அதை பயன்படுத்தி சமீப காலங்களில் நிறைய வெற்றிகளை தொடர்ச்சியாக குவித்து வரும் அந்த அணி இம்முறை தங்களால் இந்திய மண்ணிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளனர்.

- Advertisement -

ஜெயிச்சா ஆச்சர்யம்:
இந்நிலையில் இந்த தொடரில் வலுவான இந்தியா தங்களின் சொந்த ஊரில் தோற்றால் தான் மிகப்பெரிய ஆச்சரியம் என்று முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் மற்றும் ஜிம்பாப்வே வீரர் ஆண்ட்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இத்தொடரில் இங்கிலாந்தும் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இங்கே நான் கணிப்பு செய்யவில்லை. ஆனால் ஒருவேளை இத்தொடரில் இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடித்தால் நான் ஆச்சரியமடைவேன். ஏனெனில் அபாரமாக செயல்படக்கூடிய தன்னம்பிக்கையை கொண்டுள்ள அவர்கள் தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் சூழ்நிலைகளை நன்றாக தெரிந்தவர்கள். மேலும் அவர்கள் ராகுல் டிராவிட்டிடம் நல்ல பயிற்சிகளை பெற்றவர்கள்”

- Advertisement -

“இந்தியா என்றாலே அவர்களுடைய ஸ்பின்னர்களை பற்றி தான் நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களும் ஆபத்தானவர்களாக செயல்படக் கூடியவர்கள் என்பதை நாம் குறைத்து மதிப்பீட்டு விளையாட முடியாது. மறுபுறம் இங்கிலாந்து இந்தளவுக்கு அதிரடியாக விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியில் இருந்த போது அவர்கள் விளையாடிய ஆட்டம் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தது”

இதையும் படிங்க: உங்ககிட்ட ரவீந்திர ஜடேஜா இருந்தா.. எங்ககிட்ட அவரு இருக்காரு.. இந்திய அணியை எச்சரித்த – மைக்கல் வாகன்

“அவர்கள் விளையாடும் ஆட்டத்தில் அனைத்தும் வேகமாக நடக்கிறது. எனவே இந்த 2 அணிகளும் பார்ப்பது நன்றாக இருக்கும். இந்தியாவிடம் கிளாஸ் பவுலர்கள் இருக்கின்றனர். அவர்களை இங்கிலாந்து பேட்டிங் துறையில் இருப்பவர்கள் அட்டாக் செய்து விளையாடப் போகிறார்கள். இந்த தொடருக்காக நானும் அவருடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement