உங்ககிட்ட ரவீந்திர ஜடேஜா இருந்தா.. எங்ககிட்ட அவரு இருக்காரு.. இந்திய அணியை எச்சரித்த – மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கெதிராக நடைபெறயிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரானது இரண்டு அணிகளுக்குமே முக்கியமானது என்பதனால் இந்த தொடர் பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பேட்டி அளித்து வரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ஒருவேளை இந்த தொடரின் முதல் பந்தில் இருந்தே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ப சாதகமாக இருந்தால் அது மிகப் பெரிய தவறாக இருக்கும். ஏனெனில் ஜடேஜாவிற்கு நிகரான சுழற்பந்து வீச்சாளர் எங்களிடமும் உள்ளார்.

சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஜாக் லீட்சை அணிக்குள் கொண்டு வந்து அவரை பந்துவீச வைப்போம். ரவீந்திர ஜடேஜாவை விட ஜாக் லீச் நல்ல ஸ்பின்னரா? என்று கேட்டால் இல்லை தான். இருப்பினும் அவரால் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

அதேபோல் பந்து போட்டியின் முதல் நாளில் இருந்தே சுழல ஆரம்பித்தால் நிச்சயம் இந்திய அணிக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை மைதானம் பிளாட்டாக இருந்தால் இந்தியா நிறைய ரன்களை குவிக்கும். அதேபோன்று இங்கிலாந்து அணியும் நிறைய ரன்களை குவிக்கும்.

இதையும் படிங்க : ஒன்றல்ல, இரண்டல்ல.. ஸ்பாட் ஃபிக்சிங் செய்தாரா சோயப் மாலிக்? மோசமான உலக சாதனையால் ரசிகர்கள் சந்தேகம்

சமீபகாலமாகவே இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த தொடரில் எங்களது அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே சவால் நிறைந்த ஒன்றுதான் என்றும் மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement