வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 கரீபியன் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 4.30 மணிக்கு கயானாவில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த ட்ரின்பாகோ 19.1 ஓவரில் 168-3 ரன்கள் எடுத்தது.
அப்போது மைதானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ராட்சத மின்விளக்குகள் திடீரென பழுதானதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நேரம் தேவைப்பட்டது. அதன் காரணமாக அப்போட்டி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போன்ற சூழ்நிலையில் புள்ளிப்பட்டியலில் பார்படாஸ் அணியை விட ட்ரின்பாகோ அணி மேலே இருந்தது.
மின்விளக்கு பிரச்சனை:
எனவே போட்டி ரத்து செய்யப்பட்டால் ட்ரின்பாகோ அணி நேரடியாக குவாலிபயர் 2 போட்டிக்கு விளையாட தகுதி பெறும். ஆனால் போட்டி ரத்து செய்யப்பட வேண்டிய அதிகபட்ச நேரத்திற்கு 10 நிமிடம் முன்பாக ராட்சத மின்விளக்குகள் சரி செய்யப்பட்டன. அதன் காரணமாக டிஎல்எஸ் விதிமுறைப்படி பார்படாஸ் அணிக்கு 5 ஓவரின் 60 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதைத் துரத்திய பார்படாஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் சரவெடியாக 17 பந்துகளில் 50* ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக கைரன் பொல்லார்ட் தலைமையிலான ட்ரின்பகோ அணி பரிதாபமாக எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது. இத்தனைக்கும் 19.1 ஓவர்கள் விளையாடிய அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரான் 91* (60), ஜேசன் ராய் 25 (17), ஆண்ட்ரே ரசல் 20* (18) ரன்கள் எடுத்துப் போராடினார்கள்.
வெற்றியை திருடிட்டாங்க:
ஆனால் மின்விளக்கு பிரச்சனையால் பார்படாஸ் அணி கடைசி நேரத்தில் அதிரடியாக வெற்றியை பறித்துச் சென்றது. இந்நிலையில் அப்போட்டியில் மின்விளக்கு பிரச்சனையால் தங்களுடைய வெற்றி திருடப்பட்டதாக ஆண்ட்ரே ரசல் இன்ஸ்டாகிராமில் மோசமான கெட்ட வார்த்தைகளுடன் திட்டியுள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: தோனி மாதிரி பிளேயருக்காக மட்டுமே இதெல்லாம் நடக்கும்.. அதுல தப்பும் இல்ல.. முகமது கைப் கருத்து
“பொதுவாக நான் இணையத்தில் வந்து என்னுடைய கருத்தை கூறும் நபர் அல்ல. ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் எங்களுடைய வெற்றி கொள்ளையடிக்கப்பட்டதாக உணர்கிறேன். பாதிக்கப்பட்ட மின்விளக்குகள் போட்டி ரத்து செய்யப்படும் அதிகபட்ச நேரத்திற்கு சற்று முன்பாக மீண்டும் வந்தது. பின்னர் 30 பந்துகளில் 60 பந்துகள் என்ற இலக்கு உருவாக்கப்பட்டது. ஆம் ஆண்ட்ரே ரசல் சொல்வது சரி தான். இது தூய்மையான திருட்டு என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



