தோனி மாதிரி பிளேயருக்காக மட்டுமே இதெல்லாம் நடக்கும்.. அதுல தப்பும் இல்ல.. முகமது கைப் கருத்து

Mohammad Kaif 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் 2 சாம்பியன்ஸ் டி20 லீக் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இருப்பினும் தற்போது 42 வயதை தொட்டு விட்ட தோனி கடந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகி சாதாரண கீப்பராக விளையாடினார். மறுபுறம் ருதுராஜ் தலைமையில் விளையாடிய சிஎஸ்கே லீக் சுற்றுடன் வெளியேறி சென்னையில் நடைபெற்ற ஃபைனலில் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்பும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி காணப்படுகிறது.

- Advertisement -

தோனிக்காக மாறிய விதிமுறை:

அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் கேட்டது போல் 2025 ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் வீரர் விதிமுறையை மீண்டும் பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அதனால் 5 வருடங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனியை 2025 ஐபிஎல் தொடரில் வெறும் 4 கோடிக்களுக்கு சிஎஸ்கே தக்க வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன் காரணமாக அடுத்த வருடம் தோனி விளையாடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நீக்கப்பட்ட அன்கேப்ட் வீரர் விதிமுறை தோனிக்காக மட்டுமே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். தோனி போன்ற வீரருக்காக அடிப்படை விதிமுறைகளிலேயே இப்படி மாற்றம் செய்வதில் தவறில்லை என்றும் கைப் கூறியுள்ளார். இது பற்றி அவர் ஸ்டார்ட் ஸ்பாட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனி ஒர்த்தான பிளேயர்:

“எம்எஸ் தோனி மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பை உங்களால் பெற முடியும். ஃபிட்டாக இருக்கும் அவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்வதுடன் நன்றாக கீப்பிங் செய்கிறார். எனவே அவர் விரும்பும் வரை விளையாடலாம் என்று நான் நம்புகிறேன். மிகப்பெரிய வீரரான அவர் பெரிய மேட்ச் வின்னர். சிஎஸ்கே அணியின் லீடர். இந்த விதிமுறை சரியான வழியில் மாற்றப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: இது எல்லாமே நாடகம் தான்.. தன் மகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற முகமது ஷமி மீது – முன்னாள் மனைவி விளாசல்

“ஒருவேளை தோனி ஃபிட்டாக நன்றாக விளையாடினால் ஏன் விதிமுறையை மாற்றி அவரை விளையாட விடக்கூடாது? அந்த விதிமுறை தோனிக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தோனி போன்ற வீரர்களுக்காக நீங்களும் விதிமுறையை மாற்ற விரும்புவீர்கள்” என்று கூறினார். அந்த வகையில் தோனி விளையாடினால் நிறைய ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது ஐபிஎல் தொடருக்கு சாதகமாகும். அதனாலேயே தோனிக்காக விதிமுறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement