இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் காயம் காரணமாக இதுவரை இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்து வருகிறார். விரைவில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் முகமது ஷமி தற்போது மெல்ல மெல்ல பந்துவீச்சு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவர் விரைவில் மீண்டும் இந்திய அணிக்காக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளுடன் சென்றது எல்லாம் நாடகம் :
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஷமி தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனது மகளுடன் ஷாப்பிங் சென்ற வீடியோவை பகிர்ந்திருந்தார். ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜஹான் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்த வேளையில் தற்போது இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது மகளை சந்தித்ததாகவும் அப்போது வார்த்தைகள் வரவில்லை, அன்பு மட்டுமே மிகுதியாக இருந்தது என்று தனது மகளுடன் ஷாப்பிங் சென்ற வீடியோவை அவர் பகிர்ந்து இருந்தார். முஹம்மது ஷமியின் இந்த வீடியோ பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில் அவரது மனைவி மீது பலரும் விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தனது மகள் கேட்ட எதையும் வாங்கி தராமல் இலவசமாக கிடைக்கும் பொருட்களை மட்டுமே வாங்கி தரும் இடங்களுக்கு முகமது ஷமி அழைத்துச் சென்றார் என ஹாசின் ஜஹான் குற்றச்சாற்று ஒன்றினை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : உலகிற்கு சீன் காட்டுவதற்காகவே முகமது ஷமி இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
எனது மகள் பாஸ்போர்ட்டின் காலம் முடிவடைந்து விட்டது. எனவே புதிய பாஸ்போர்ட்க்கு ஷமியின் கையெழுத்து தேவை என்பதற்காகவே அவர் தனது தந்தையை சந்தித்தார். ஆனால் முகமது ஷமி அந்த கையெழுத்தை போடவில்லை. மாறாக எனது மகளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் மாலுக்கு சென்ற அவர் எந்த நிறுவனத்திற்காக விளம்பரம் செய்கிறாரோ அந்த இடத்திற்கு சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க : சர்பராஸ் கானுக்கு இதை செஞ்சதுக்காக அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்.. இந்திய அணியை சாடிய முகமது கைப்
அந்த கடையில் எது வாங்கினாலும் அவருக்கு இலவசம் என்பதாலேயே அவரை அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார். எனது மகள் கிட்டார் மற்றும் கேமரா வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவற்றை வாங்கித் தராமல் அவருக்கு எது இலவசமாக கிடைக்கிறதோ அதை மட்டுமே வாங்கி கொடுத்து முகமது ஷமி சீன் காட்டியிருக்கிறார் என அவரது மனைவி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



