ஆச்சரியத்தை அளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.. ஏமாற்றத்தை கொடுத்த பென் ஸ்டோக்ஸ் – சூடுபிடிக்கும் மெகா ஏலம்

Anderson-and-Stokes
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருவதால் ஒவ்வொரு சீசனுமே அனைவரது மத்தியிலும் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

சூடுபிடிக்கும் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் :

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-ஆவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமானது இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன. அதோடு இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்களும் தங்களது பெயர்களை அதிகாரபூர்வமாக பதிவு செய்துவிட்டனர். அந்த வகையில் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1574 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக அதிகாரவப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதில் 1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். அது தவிர்த்து சில உறுப்பு நாட்டு வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முதன்முறையாக 42 வயதான முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பெயரை பதிவு செய்துள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இதுவரை நடைபெற்ற எந்த ஒரு சீசனிலும் தனது பெயரை பதிவு செய்யாத அவர் தற்போது முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்பட்டு தனது பெயரை பதிவு செய்துள்ளார். இப்படி ஒருபுறம் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பெயரை பதிவு செய்து ஆச்சரியத்தை அளித்த வேளையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் ஏமாற்றம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிற்கும், விராட் கோலிக்கும் எதிராக அவங்க 3 பேர் பயத்தை காட்டுவாங்க – மைக்கல் வாகன் கருத்து

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வந்த அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தனது பெயரை பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக அவரால் மினி ஏலத்திலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement