நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது. அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
ரோஹித் மற்றும் கோலிக்கு ஏற்படவுள்ள ஆபத்து :
அதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.
இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரானது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு மிக முக்கியமான காரணம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தடுமாற்றம் தான் என்று பலராலும் பேசப்பட்டு இருக்கிறது.
ஏனெனில் கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே 100 ரன்களை கூட கடக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் இருவரும் எப்படி விளையாடுவார்கள்? என்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் கூறுகையில் : எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தாலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை பயமுறுத்த காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்கள் சொதப்பதற்க்கு வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாக பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் போன்ற உலகத்திரமான பந்துபந்துவீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து அட்டாக் செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அசத்தப்போகும் 2 வீரர்கள் இவர்கள்தான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு
இதன் காரணமாக ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த விடயம் தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலயில், சரியான டெக்னிக்குடன் விளையாட வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த தொடரிலும் தடுமாற அதிக வாய்ப்புள்ளதாக மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.



