சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் கார் பரிசளிக்க விரும்புகிறேன். ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு – எதற்காக தெரியுமா?

Anand-Mahindra
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிராக ராஜ்கோட் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக 26 வயதான இளம் வீரரான சர்பராஸ் கான் அறிமுகமாகி இருந்தார். கடந்த ஏழு ஆண்டுகால காத்திருப்பதற்குப் பின்னர் தனக்கு கிடைத்த இந்த முதல் வாய்ப்பை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார். அந்த வகையில் முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த அவர் 66 பந்துகளை சந்தித்து 9 பவுணடரி மற்றும் ஒரு சிக்சர் என 62 ரன்கள் குவித்து அசத்தினார்.

ரஞ்சி தொடரில் ஏகப்பட்ட ரன்களை குவித்த அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது முதல் இன்னிங்ஸில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. அதேபோன்று இந்த போட்டியில் ஜடேஜாவின் தவறான அழைப்பின் காரணமாகவே சர்பராஸ் கான் ஓடிவந்து ரன் அவுட்டானார். அதற்காக ஜடேஜா மட்டுமின்றி கேப்டன் ரோகித் சர்மாவும் அவரது அந்த விக்கெட்டிற்கு வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இப்படி இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முழுவதுமே அவரது இந்த அறிமுகம் பற்றியே அனைவரும் பேசிவந்த வேளையில் தற்போது சர்பராஸ் காரின் தந்தை நவ்ஷாத் கானுக்கு தார் காரை பரிசளிக்க விரும்புவதாக ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டதாவது : தைரியத்தை இழந்து விட வேண்டாம். கடின உழைப்பு, தைரியம், பொறுமை போன்ற தந்தையின் குணங்களை விட ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் ஏதேனும் உள்ளதா?

இதையும் படிங்க : 3வது போட்டியிலிருந்து இரவோடு இரவாக அஸ்வின் விலகியது ஏன்? பின்னணியை உடைத்த பிசிசிஐ துணை தலைவர்

தனது மகனுக்கு உத்வேகம் தரும் வகையில் ஒரு நல்ல தந்தையாக இருப்பதற்காக சர்பராஸ் கானின் தந்தை நவுஷாத் கானுக்கு மகேந்திரா தார் காரை பரிசளிக்க விரும்புகிறேன். எனது பரிசை அவர் ஏற்றுக் கொண்டால் அது எனக்கு பாக்கியம் மற்றும் கவுரவமாக கருதுவேன் என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement