IND vs PAK : ஓகே போதும்.. நான் டீவிய ஆஃப் பண்ணிக்குறேன். இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

Anand-Mahindra
- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டியில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியை சந்தித்த இந்திய அணி முதல் போட்டியில் 266 ரன்கள் குவித்திருந்தாலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பவுலர்களை எவ்வாறு சமாளிக்க போகிறார்கள் என்ற அச்சம் அனைவரது மத்தியிலும் எழுந்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்றின் முக்கியமான போட்டியானது நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. ஆனால் கடந்த போட்டியை காட்டிலும் இந்த போட்டியில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்த இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

குறிப்பாக முதல் விக்கெட்டிற்கு 16.4 ஓவர்களில் 121 ரன்கள் குவித்து அசத்தியது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தி பின்னர் ஷதாப் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதனை தொடர்ந்து சுப்மன் கில்லும் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் விராட் கோலி 8 ரன்கள், கே.எல் ராகுல் 17 ரன்களுடனும் இருந்தபோது இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.

- Advertisement -

இதன் காரணமாக போட்டியானது இன்று (செப்டம்பர் 11) ரிசர்வ் டேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆரம்பித்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தவே பாகிஸ்தான அணி மீண்டும் ஆட்டத்திற்குள் நுழைந்தது. இதனைக் கண்ட மகேந்திரா நிறுவனத்தின் தலைமையாளரான ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அளித்துள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : உலகிலேயே வித்யாசமாக வீரர்களின் குடும்பத்தால் 2023 உ.கோ அணியை அறிவித்த நியூஸிலாந்து – வில்லியம்சன் இருக்காரா?

அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த அடுத்த இரண்டு விக்கெட் விழுந்தவுடன் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் : “ஓகே நான் இப்பொழுது டிவியை ஆஃப் பண்ணப்போகிறேன்”, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று தனது அதிருப்தியை அந்த டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். ஒருவேளை ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடர்ந்து அதிவேகத்தில் ஆகியிருந்தால் இந்திய அணியின் ரன் குவிப்பு இன்னும் கூடுதலாக இருந்திருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement