உலகிலேயே வித்யாசமாக வீரர்களின் குடும்பத்தால் 2023 உ.கோ அணியை அறிவித்த நியூஸிலாந்து – வில்லியம்சன் இருக்காரா?

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதை தொடர்ந்து இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்தது.

அதனால் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களுடைய அணியை அறிவித்த நிலையில் ஐசிசியிடம் நேரடியாக சமர்ப்பித்த தங்களுடைய 15 பேர் அணியை நியூசிலாந்து இன்று தான் வெளியிட்டுள்ளது. பொதுவாக அறிக்கை அல்லது தேர்வு குழுவினர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து தங்களுடைய அணியை வெளியிடுவதே வழக்கமாகும். ஆனால் அவற்றை தாண்டி தனித்துவமாக செயல்பட்ட நியூசிலாந்து தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை அதில் இடம் பிடித்த வீரர்களின் குடும்பங்களின் வாயால் வெளியிட்டுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

நியூஸிலாந்து அணி அறிவிப்பு:
அதில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகரான திறமையுடன் அசத்தி வரும் அவர் கடந்த 2019 உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை ஃபைனல் வரை சென்று ஆட்டநாயகன் விருது வென்றார்.

குறிப்பாக அவரது தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான ஃபைனலில் தோல்வியை சந்திக்காத போதிலும் ஐசிசியின் முட்டாள் தனமான விதிமுறையால் நியூசிலாந்து முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த நிலைமையில் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களை சோகமடைய வைத்தது.

- Advertisement -

இருப்பினும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் சீக்கிரமாகவே குணமடைந்த அவர் தற்போது கேப்டனாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது நியூசிலாந்துக்கு மிகப்பெரிய தெம்பாக அமைந்துள்ளது. அதிலும் என்னுடைய தந்தை கேப்டனாக செயல்படுவார் என்பதை வில்லியம்சன் மனைவி சொல்லிக் கொடுக்க அவருடைய செல்ல குழந்தை கூறியது மிகவும் க்யூட்டாக அமைந்தது.

அதே போல ட்ரெண்ட் போல்ட், டேவோன் கான்வே போன்ற இதர நட்சத்திரங்களும் இந்த அணியில் அறிவிக்கப்பட்டதை அவர்களுடைய கும்பத்தினர் அறிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐசிசி 2023 உலக கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணி இதோ:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மீட் ஹென்றி, டாம் லாதம் (கீப்பர்), டார்ல் மிட்சேல், ஜிம்மி நீசம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்சேல் சாட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ, வில் எங்

Advertisement