அஸ்வினால் அது முடியாது.. ஆஸி தொடரில் அசத்தலைன்னா வருங்காலத்தை வீணடிக்கமா ட்ராப் பண்ணுங்க – அமித் மிஸ்ரா அதிரடி

Amit Mishra
- Advertisement -

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அதில் 2023 ஆசிய கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அதனால் அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை விட இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நட்சத்திர சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் லெக் அல்லது இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

வருங்காலத்தை வீணடிக்காதீங்க:
இருப்பினும் 37 வயதை நெருங்கியுள்ள அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக எவ்விதமான ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். அந்த சூழ்நிலையில் நேரடியாக இத்தொடரில் விளையாட அஷ்வினை விளையாட வைத்து உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்ய முயற்சிக்கும் இந்திய அணியின் செயலுக்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அந்த வரிசையில் அஸ்வினால் வேகமாக ஓடி ஃபீல்டிங் செய்ய முடியாது என்று தெரிவிக்கும் அமித் மிஸ்ரா ஒருவேளை இந்த ஆஸ்திரேலியா தொடரில் சுமாராக செயல்படும் பட்சத்தில் வருங்காலத்தை வீணடிக்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு விமர்சித்து பேசியது பின்வருமாறு. “அஸ்வின் தரமான பவுலர் மற்றும் விக்கெட் டேக்கர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது டி20 போட்டிகள் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

- Advertisement -

“மேலும் ஒரு ஸ்பின்னர் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக விக்கெட் எடுப்பதற்கு வீரர் தேவை என்பதாலேயே அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குல்தீப் யாதவ் போல இந்திய அணியில் இடது கை அல்லது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மட்டும் இருக்கும் நிலையில் அஸ்வின் ஆஃப் ஸ்பின்னராக இருப்பதே அவருக்கு சாதகத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அஸ்வின் எந்தளவுக்கு விக்கெட்டுகள் எடுக்கிறார் என்பதை இந்திய அணி பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: இப்போவும் சொல்றேன்.. ஆஸி அணிக்கு டேஞ்சரா இருந்து 2023 உ.கோ அணியில் அவர் செலக்ட்டாவாரு பாருங்க – எம்எஸ்கே பிரசாத்

“குறிப்பாக அவரால் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் நீங்கள் 10 ஓவர்கள் பந்து வீசி 40 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ய வேண்டும். அந்த துறையில் தற்போதைய நிலையில் அவரால் அசத்த முடியுமா என்பது சந்தேகமாகும். அதற்காகத் தான் நீங்கள் ஒரு இளம் வீரரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement