இப்போவும் சொல்றேன்.. ஆஸி அணிக்கு டேஞ்சரா இருந்து 2023 உ.கோ அணியில் அவர் செலக்ட்டாவாரு பாருங்க – எம்எஸ்கே பிரசாத்

MSk Prasad
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது. 2023 ஆசிய கோப்பை வென்ற கையுடன் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆச்சரியப்படும் வகையில் தேர்வாகியுள்ளனர்.

குறிப்பாக ஆசிய கோப்பையில் காயத்தை சந்தித்த அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய உலகக்கோப்பை அணியில் தேர்வாகியுள்ள அனைத்து ஸ்பின்னர்களுமே லெக் அல்லது இடது கை ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். அதனால் எதிரணிகளில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பதற்காக ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் இத்தொடரில் வாய்ப்பு பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உலகக் கோப்பை அணியிலும் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

எம்எஸ்கே பிரசாத் ஆதரவு:
அதில் ஏற்கனவே 700க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை எடுத்து 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆஸ்திரேலியா தொடரில் அசத்தும் பட்சத்தில் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவரை நேரடியாக உலகக் கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்று நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தானவராக செயல்பட்டு 2023 உலக கோப்பையிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவார் என்று நம்புவதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு மாதமாகவே அஷ்வினுக்கு ஆதரவை கொடுக்கும் ஒரே முன்னாள் வீரராக இருந்து வரும் அவர் ஏற்கனவே தம்முடைய 2023 உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்திருந்தார்.

- Advertisement -

அந்த வரிசையில் அப்போது அஷ்வினுக்கு கொடுத்த ஆதரவை இப்போதும் இரு மடங்காக கொடுக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த நல்ல செய்தியாகும். சொல்லப்போனால் இந்திய ஆடுகளங்களில் அஸ்வின் மிகுந்த பயனை ஏற்படுத்துபவராக இருப்பார் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். ஏனெனில் இந்திய மண்ணில் மட்டுமே அவர் கிட்டத்தட்ட 500 சர்வதேச கிரிக்கெட்டுகளை எடுத்துள்ளார்”

இதையும் படிங்கமுதல் முறையாக உலககோப்பையில் விளையாட இருப்பது குறித்து மனம்திறந்த சுப்மன் கில் – விவரம் இதோ

“அத்துடன் அனைத்து எதிரணிகளிலும் 3 – 4 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். எனவே இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆபத்தானவர் என்பதை அவர் நிச்சயம் நிரூபிப்பார். மேலும் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement