முதல் முறையாக உலககோப்பையில் விளையாட இருப்பது குறித்து மனம்திறந்த சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman-Gill
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இம்முறை 2023-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இம்முறை நிச்சயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு பலமான அணியாக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை நமக்கு தான் என்று ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அணியில் இடம் பெற்றுள்ள சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்க தயாராகி வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட இருப்பது குறித்து சுப்மன் கில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சுப்மன் கில் கூறுகையில் : இது என்னுடைய முதல் உலகக் கோப்பை தொடர். இந்திய அணிக்காக இது போன்ற ஒரு பெரிய தொடரில் விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் சிறுவயதில் இருக்கும்போது இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

- Advertisement -

தற்போது அந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உணர்வை தருகிறது. எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதே பார்முடன் உலக கோப்பை தொடர்க்கும் செல்வேன் என்று சுப்மன் கில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் 2023 : மழைக்கு முன் மலேசியாவை புரட்டி எடுத்த இந்திய அணி நாக் அவுட்டுக்கு தகுதி.. செமி ஃபைனலில் மோதப்போவது யார்?

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ஆறு போட்டியில் பங்கேற்ற சுப்மன் கில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் என 75 ரன்கள் சராசரியுடன் 300 ரன்களை குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement