விராட் கோலியை ஓய்வு பெற அறிவுறுத்திய அப்ரிடி – வேற லெவலில் கலாய்த்து பதிலடி கொடுத்த இந்திய வீரர்

Afridi
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினம்தோறும் எதிர்கொண்ட விமர்சனங்கள் சமீபத்திய ஆசிய கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக ஏராளமான ரன்களையும் சதங்களையும் விளாசி சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அவர் 2019 நவம்பருக்கு பின் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை அடித்தாலும் அதை கண்டுகொள்ளாத நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் அதுவரை அவர் பெற்றுக் கொடுத்த வெற்றிகளை மறந்து அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்தனர்.

இருப்பினும் இங்கு முன்னாள் வீரர்கள் என்ற பெயரில் விமர்சிக்கும் பலரில் 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சம் ஆதரவு கொடுத்தனர். அப்படியே 1020 நாட்கள் உருண்டோடிய நிலையில் 2022 ஆசிய கோப்பையில் ஆரம்பம் முதலே மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக பேட்டிங் செய்து பார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் சதமடித்து 122* ரன்களை விளாசி தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அப்ரிடியின் அறிவுரை:
அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை விளாசிய அவர் 3 வருடங்களாக அடம்பிடித்த 71வது சதத்தையும் விளாசி ரிக்கி பாண்டிங் உலக சாதனையை சமன் செய்தார். மேலும் தற்போது ஃபார்முக்கு திரும்பிய அவர் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் 5 வருடங்கள் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் சுமார் 3 வருடங்களாக பார்மை இழந்து தவித்தபோது அணியிலிருந்து நீக்க சொல்லும் அளவுக்கு எழுந்த விமர்சனங்கள் மீண்டும் ஒருமுறை வருவதற்கு முன்பாக தற்போது நல்ல பார்மில் இருக்கும் போதே விரைவில் ஓய்வெடுக்கும் முடிவு பற்றி சிந்திக்குமாறு விராட் கோலியை முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுறுத்தினார்.

பொதுவாக நல்ல பார்மில் உச்சத்தில் இருக்கும்போது கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதே சரியான முடிவாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுவார்கள். அந்த வகையில் தற்போது சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்து பார்முக்கு திரும்பி உச்சத்தை எட்டியுள்ள விராட் கோலி மீண்டும் ஒரு வீழ்ச்சியை சந்திப்பதற்கு முன்பாக கூடிய விரைவில் ஓய்வு பற்றி சிந்திக்குமாறு அஃப்ரிடி அறிவுறுத்தியிருந்தார்.

- Advertisement -

கலாய்த்த மிஸ்ரா:
ஆனால் விமர்சனங்களையும் மோசமான காலத்தையும் தாண்டி விட்ட விராட் கோலி இனிமேல் சூப்பராக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பும் நிலையில் சாகித் அப்ரிடி நேற்று கூறிய இந்த கருத்து நிறைய இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. இந்நிலையில் இந்த செய்தியை பார்த்த முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா ஷாஹித் அப்ரிடியை கலாய்க்கும் வகையில் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “அன்புள்ள அப்ரிடி, சில வீரர்கள் ஒரு முறை மட்டுமே ஓய்வு பெறுவார்கள். எனவே இதிலிருந்து விராட் கோலியை விட்டுவிடுங்கள்” என்று கையெடுத்து கும்பிட்டு கலாய்த்துள்ளார்.

பாகிஸ்தானின் ஜாம்பவானாக போற்றப்படும் சாகித் அப்ரிடி தன்னுடைய கேரியரில் நிறைய முறை ஓய்வு பெற்று மீண்டும் மீண்டும் வந்து விளையாடிதாலேயே அமித் மிஸ்ரா இவ்வாறு கூறுவதற்கு காரணமாகும். ஏனெனில் முதலில் கடந்த 2006இல் டெஸ்ட் கிரிக்கட்டில் ஓய்வுபெற்ற அப்ரிடி அடுத்த சில மாதங்களிலேயே அந்த முடிவை வாபஸ் பெற்று திரும்ப விளையாடினார். அதன்பின் 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஓய்வு பெற்ற அவர் 2011 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

ஆனால் அதில் வெற்றி பெறாததால் அந்த உலகக் கோப்பையுடன் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு நிற்காத அவர் மீண்டும் அந்த முடிவிலிருந்து திரும்பி 2015 உலக கோப்பையில் பாகிஸ்தானை வழி நடத்தி ஒரு வழியாக கடந்த 2017இல் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க : தோனி செய்ததை நீங்க செய்யும் நேரம் வந்தாச்சு – ரோஹித்துக்கு முன்னாள் வீரர் கோரிக்கை, ஏற்க மறுக்கும் ரசிகர்கள்

இப்படி தன்னுடைய கேரியரிலேயே பல முறை ஓய்வு பெற்று திரும்ப வந்த நீங்கள் எங்களுடைய மகத்தான விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் என்று இந்திய ரசிகர்கள் அமித் மிஸ்ராவுக்கு ஆதரவாக அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement