- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 3 பேரும் கொஞ்ச டேஞ்சரா இருப்பாங்க.. பாத்து விளையாடுங்க.. இந்திய அணியை எச்சரித்த – அம்பத்தி ராயுடு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய அணி இவங்க 3 பேருக்கு எதிரா எச்சரிக்கையா இருக்கனும் : அம்பத்தி ராயுடு

இந்நிலையில் இந்திய அணி இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் என்னென்ன தடைகளை கடக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு முக்கிய விடயங்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு நியூசிலாந்து அணிக்கெதிராக கவனமாக இருக்க வேண்டிய மூன்று வீரர்கள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணி மூன்று முக்கிய வீரர்களை கவனிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். குறிப்பாக அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான மிட்சல் சான்ட்னருக்கு எதிராக இந்திய அணி சற்று கவனமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஏனெனில் அவர் அழுத்தமான போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதனால் அவருக்கு எதிராக கூடுதல் கவனம் தேவை. அதேபோன்று டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவருமே இந்திய அணிக்கு பெரும் ஆபத்தான வீரர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே அவர்களது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை அந்த அணிக்காக வழங்கி வருவதால் அவர்களுக்கு எதிராக சரியான திட்டத்துடன் இந்திய அணி செல்ல வேண்டும். இந்த மூன்று வீரர்களுக்கு எதிராக இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியை அவர்கள் அவர்களது பக்கத்திற்கும் கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : நியூஸிலாந்து அணியில் அவரை சமாளிக்க தனியா பிளான் போடனும்.. இந்திய அணியை எச்சரித்த – சஞ்சய் பாங்கர்

மேலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி மிகவும் சவால் வாய்ந்ததாக இருக்கும் என்பதனால் இந்த இறுதிப்போட்டியானது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். அவர் கூறியது போலவே குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுடன் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -