நியூஸிலாந்து அணியில் அவரை சமாளிக்க தனியா பிளான் போடனும்.. இந்திய அணியை எச்சரித்த – சஞ்சய் பாங்கர்

Bangar
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான மாபெரும் இறுதிப்போட்டியானது வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாட இருக்கின்றன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு துவங்க உள்ளது.

நியூசிலாந்து அணியை வீழ்த்த இந்த திட்டம் தேவை : சஞ்சய் பாங்கர்

இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடந்த சில ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியுள்ளதால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி இந்த போட்டியில் அவர்களை வென்று டி20 உலக கோப்பையை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்ற காத்திருக்கிறது.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தி தாங்களும் ஐசிசி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணியும் களமிறங்க தயாராகி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு திராக பிரத்யேக திட்டத்தினை வகுக்க வேண்டும் என்று இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரச்சின் ரவீந்திராவிடம் அதிக பலவீனங்கள் தென்படவில்லை. அவர் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். எனவே அவர் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பார். ஆனால் நாம் அவரது பலவீனத்தை கண்டறிய முயற்சித்து அவருக்கு சரியான பிளான் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : மீண்டும் நிர்வாகமே அழைத்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கவுள்ள வெகுமதி.. கை மேல் கிடைத்த பலன் – விவரம் இதோ

அவரை விரைவில் ஆட்டமிழக்க வைத்தால் நியூசிலாந்து அணி பின்னடைவை சந்திக்க வைக்கலாம். எனவே இந்திய பவுலர்கள் அவருக்கு எதிராக தனி வியூகம் அமைத்து அவருக்கான பிளானை முடிவு செய்து விரைவில் அவரை ஆட்டமிழக்க வைக்க வேண்டும் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement