- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதிரடி வேணாம்ன்னு யுவராஜ் சொன்னாரு.. வெற்றிக்கு அந்த 2 பேர் தான் காரணம்.. ஆட்டநாயகன் ராயுடு பேட்டி

இங்கிலாந்தில் நடைபெற்ற 2024 உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜென்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்தியா சாம்பியன்ஸ் வென்றது. ஆனால் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்தது.

இருப்பினும் ரன்ரேட் உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்த இந்தியா சாம்பியன்ஸ் அணி செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன் தோற்கடித்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் ராயுடு:
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 157 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு ராயுடு 50 (30), யூசுப் பதான் 30 (16), குர்கீரத் 34 (33) ரன்கள் அடித்து 19.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

அதனால் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனல் இம்முறை யுவராஜ் சிங் தலைமையில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (30) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ராயுடு ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த வெற்றிக்கு தங்களைப் போன்ற ஜூனியர் வீரர்களை அற்புதமாக வழிநடத்திய கேப்டன் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் முக்கிய காரணம் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது வருமாறு. “இந்த தொடரின் தரம் சிறப்பாக இருந்தது. இங்கே அட்ஜஸ்ட் செய்து விளையாடுவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் அதை செய்து வென்றதில் மகிழ்ச்சி. ஜூனியர் வீரர்களையும் மொத்த அணியையும் சரியான வழியில் வழி நடத்திய ஹர்பஜன் மற்றும் யுவராஜ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்”

இதையும் படிங்க: 3 மேட்ச் தோற்றும் ஃபைனலில் கோப்பை ஜெயிக்க இதான் காரணம்.. அந்த 2 பேரும் அசத்திட்டாங்க.. கேப்டன் யுவராஜ் பேட்டி

“களத்தில் மிகவும் அதிரடியாக செயல்படாமல் அனைத்தையும் எளிதாக பின்பற்றி விளையாடுமாறு யுவராஜ் என்னிடம் சொன்னார். நீண்ட நாட்கள் கழித்து கிரிக்கெட்டில் விளையாடியது கடினமாக இருந்தது. இத்தொடரில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சுமாராக விளையாடிய பின்பும் வெற்றி பெறுவது எளிதாக இல்லை. இதற்கு யுவராஜ் சிங் மற்றும் அணி நிர்வாகம் முக்கிய காரணம். ஃபைனலில் 2 அணிகளுக்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

- Advertisement -