3 மேட்ச் தோற்றும் ஃபைனலில் கோப்பை ஜெயிக்க இதான் காரணம்.. அந்த 2 பேரும் அசத்திட்டாங்க.. கேப்டன் யுவராஜ் பேட்டி

Yuvraj SIngh 2
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜென்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா சாம்பியன்ஸ் அணி வென்றது. ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய இந்த தொடரில் யுவராஜ் சிங் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது. அவருடைய தலைமையில் லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்தியா சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆனால் அதன் பின் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்ற இந்தியா வாழ்வா – சாவா போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவை விட கொஞ்சம் கூடுதல் ரன் ரேட் பெற்றதன் காரணமாக நூலிலையில் அதிர்ஷ்டத்துடன் இந்தியா சாம்பியன்ஸ் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் செமி ஃபைனலில் அட்டகாசமாக விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் வலுவான ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

- Advertisement -

வெற்றிக்கு காரணம்:
அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. பர்மிங்காம் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 157 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா கேம்பியன்ஸ் சார்பில் அதிகபட்சமாக அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு அம்பத்தி ராயுடு அதிரடியாக 50 (30), குர்கீரத் 34 (33), யூசுப் பதான் அதிரடியாக 30 (16) ரன்கள் விளாசி 19.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனல் போலவே இங்கேயும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வென்றது. இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள் என்று தாம் சொன்னதை இந்திய வீரர்கள் செயல்படுத்தியதாக யுவராஜ் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த வெற்றிக்கு ராயுடு, ஹர்பஜன் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த பின்பும் எங்களுடைய வீரர்கள் தங்களுடைய சிறப்பான போராட்ட குணத்தை காண்பித்தனர். ஃபைனலில் முதல் ஓவரிலிருந்தே வேகத்தை எடுத்து வந்த எங்கள் பவுலர்களுக்கு பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது நல்லதாக அமைந்தது”

இதையும் படிங்க: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக இதுதான் காரணமா? – விவரம் இதோ

“அம்பத்தி ராயுடுவின் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தேவைப்படும் நேரங்களில் எல்லாம் ஹர்பஜன் சிங் முன்னே வந்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நாம் ரியாக்சன் கொடுக்க வேண்டும் என்று எங்கள் வீரர்களிடம் சொன்னேன். அதை தான் எங்களுடைய வீரர்கள் செய்தனர். இப்போட்டி முழுவதும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

Advertisement