மும்பையின் எம்ஐ அணிக்காக விளையாட முக்கிய பதவியை துறந்த ராயுடு.. ஒரே வாரத்தில் அதிரடி முடிவு

Ambati Rayudu Mumbai
- Advertisement -

ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு தன்னுடைய ஐபிஎல் பயணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியில் துவங்கினார். அதன் காரணமாக இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டதால் மீண்டும் வாய்ப்பு வரவில்லை. அதைத் தொடர்ந்து 2018 சீசனில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டு அபாரமாக செயல்பட்ட அவர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து 2019 உலகக்கோப்பையில் விளையாட தகுதியானவராக தயாராக இருந்தார்.

இருப்பினும் கடைசி நேரத்தில் விஜய் சங்கரை தேர்வு செய்து தம்மை கழற்றி விட்டதால் ஏமாற்றமடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அதிரடியான முடிவை எடுத்தார். அதன் பின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் 2023 சீசனில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு உதவி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.

- Advertisement -

அதிரடி முடிவு:
அந்த நிலையில் ஓய்வுக்கு பின் அடுத்ததாக தன்னுடைய பயணத்தை அரசியலில் கடந்த வாரம் ராயுடு துவங்கினார். குறிப்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான கட்சியில் இணைந்த அவர் இனிமேல் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி நிர்வகிக்கும் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாக ராயுடு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த வருடம் முதல் முறையாக துவங்கப்பட்ட ஐஎல் டி20 எனப்படும் அந்த தொடரின் 2வது சீசன் வரும் ஜனவரி 19ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாட ராயுடு தற்போது அறிவித்துள்ளார். கடந்த 2009 – 2017 வரையிலான காலகட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ராயுடு விக்கெட் கீப்பராக விளையாடினார்.

- Advertisement -

அந்த வகையில் சென்னைக்காக விளையாடி ஓய்வு பெற்ற அவர் தற்போது எம்ஐ அணிக்காக துபாயில் விளையாட உள்ளது மும்பை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதன் காரணமாக அரசியலில் இப்போது கவனம் செலுத்த முடியாது என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாகவும் ராயுடு ட்விட்டரில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அப்போல்லாம் விட்டுட்டு ஃபார்முக்கு வந்த அப்றம் கழற்றி விட்டிங்களே.. நட்சத்திர வீரர் பற்றி ரசிகர்கள் ஆதங்கம்

இது பற்றி தன்னுடைய ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். அதனால் அரசியல் இருந்து சிறிது காலம் நான் ஒதுங்கி இருக்கிறேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement