அப்போல்லாம் விட்டுட்டு ஃபார்முக்கு வந்த அப்றம் கழற்றி விட்டிங்களே.. நட்சத்திர வீரர் பற்றி ரசிகர்கள் ஆதங்கம்

KL rahul 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த இவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக மேற்கொண்டு ஒரு 20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்தனர். அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையில் புதிய அணியை பிசிசிஐ களமிறக்கும் என்ற செய்திகள் வலம் வந்தன.

- Advertisement -

ஃபார்மில் இருக்கும் போது:
இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயத்தால் விலங்கியுள்ளதால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2024 டி20 உலகக் கோப்பையில் அந்த 2 வீரர்கள் விளையாடுவதும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த 2 சீனியர் வீரர்களையும் தேர்வு செய்துள்ள தேர்வுக் குழு நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை கழற்றி விட்டுள்ளது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவரும் மோசமாக விளையாடி இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் அந்த காலகட்டங்களில் சஞ்சு சாம்சனை கழற்றி விட்ட தேர்வுக் குழு ராகுலுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தது உச்சகட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் தொடர்ந்து சுமாராக செயல்பட்டு வந்த காரணத்தால் இறுதியில் அவரிடமிருந்து துணை கேப்டன்ஷிப், ஓப்பனிங் இடம் பறிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த நிலையில் ரிசப் பண்ட் காயத்தை சந்தித்து வெளியேறியதால் அதிர்ஷ்டமாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு பெற்ற ராகுல் அதை சரியாக பயன்படுத்தி 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். மேலும் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் சதமடித்து அசத்திய அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

இதையும் படிங்க: வரலாற்று சாதனை படைத்த தீப்தி சர்மா.. இந்திய மகளிரணிக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா

அந்த வகையில் சுமாராக செயல்பட்ட போதெல்லாம் வாய்ப்புகளை கொடுத்த தேர்வுக் குழு தற்போது ஃபார்மில் இருக்கும் ராகுலை விட்டுள்ளதாக சில ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக ராகுல் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு பெற முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement