இந்திய அணி இன்னும் அவரை சரியா யூஸ் பண்ணல. அவரு எப்பேர்ப்பட்ட பிளேயர் தெரியுமா? – சி.எஸ்.கே வீரரை ஆதரித்த ராயுடு

Rayudu-and-CSK
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்று அசத்தியது. அதோடு ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சென்னை அணி சமம் செய்தது.

இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியோடு சிஎஸ்கே அணியின் அனுபவ வீரரான அம்பத்தி ராயுடுவும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் காரணமாக அவரை கௌரவிக்கும் விதத்தில் தோனி ஐபிஎல் கோப்பையை கையில் வாங்கும் போது வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஜடேஜாவையும், ஓய்வுபெற்று செல்லும் ராயுடுவையும் அழைத்து மூவரும் சேர்ந்து ஒன்றாக கோப்பையை பெற்றுக் கொண்டனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு தரமான வீரர் என்றும் அவர் மூன்று விதமான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் தோனியே கேப்டனாக செயல்படுவார்.

ஆனால் தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாவதற்கு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஒரு அணியை தலைமை தாங்குவதற்கான பண்பும். திறமையும் அவரிடம் உள்ளது. பிளமிங் மற்றும் தோனி ஆகியோரது தலைமையின் கீழ் ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறப்பாக முன்னேறியுள்ளார். அதோடு என்னை பொறுத்தவரை அவரை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறுவேன்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் மூன்று விதமான ஃபார்மேட்டிலும் அவரால் விளையாட சிறப்பாக முடியும். அந்த அளவிற்கு அவர் ஒரு திறமையான வீரர் என ருதுராஜ் கெய்க்வாட்டை ஆதரித்து அம்பத்தி ராயுடு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்திய அணியில் ஏற்கனவே ரோகித் சர்மா, கே.எல் ராகுல், இஷான் கிஷன், சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என பல வீரர்கள் வரிசை கட்டி துவக்க வீரர்களுக்கான போட்டியில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : சொந்த மண்ணில் மட்டுமே புலியா? அந்த புள்ளிவிவரம் உங்க கண்ணுக்கு தெரியாதே – விமர்சகர்களுக்கு விராட் கோலி மாஸ் பதிலடி

இவ்வேளையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கிடைத்த சில வாய்ப்புகளில் அவர் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இனிவரும் போட்டிகளில் எப்போதாவது அவருக்கு முதன்மை அணியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அதனை ருதுராஜ் விடமாட்டார் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement