சொந்த மண்ணில் மட்டுமே புலியா? அந்த புள்ளிவிவரம் உங்க கண்ணுக்கு தெரியாதே – விமர்சகர்களுக்கு விராட் கோலி மாஸ் பதிலடி

Virat-Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்து 121 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன், கிமர் ரோச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

Kohli-1

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்நரேன் சந்தர்பால் 33 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 37* ரன்களும் மெக்கன்சி 14* ரன்களும் எடுத்ததால் 2வது நாள் முடிவில் 86 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் 121 ரன்கள் குவித்த விராட் கோலி வழக்கம் போல நிறைய சாதனைகளை படைத்து தன்னை கிரிக்கெட்டின் நாயகன் என்பதை நிரூபித்தார். அதை விட கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சதமடித்திருந்த அவர் 5 வருடங்கள் கழித்து வெளிநாட்டு மண்ணில் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விராட் கோலியின் பதிலடி:
மேலும் மொத்தமாக இதுவரை அடித்துள்ள 29 டெஸ்ட் சதங்களில் 14 மட்டுமே சொந்த மண்ணில் அடித்துள்ள அவர் 15 சதங்களை வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார். அந்த வகையில் சொந்த மண்ணில் மட்டுமே அசத்துபவர் என்று பேசுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என வெளிப்படையாகவே பதிலடி கொடுத்துள்ள விராட் கோலி இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் இவற்றையெல்லாம் வெளியில் இருப்பவர்களே பேசுகிறார்கள். சொல்லப்போனால் நான் சொந்த மண்ணுக்கு வெளியே 15 சதங்கள் அடித்துள்ளேன் என்பது மோசமான சாதனை கிடையாது”

Kohli-runout

“மேலும் நாங்கள் வெளிநாட்டு மண்ணில் 30 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. அந்த காலகட்டங்களில் எவ்வளவு போட்டியில் நாங்கள் விளையாடவில்லை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது பெரிய எண்ணாகும். அதற்கிடையே நான் 2 முறை 50 ரன்கள் அடித்துள்ளேன். அப்படியென்றால் நான் சில சதங்களை தவறவிட்டதை போலவே 120 ரன்களை எடுத்து இரட்டை சதங்களை தவற விட்டுள்ளேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் பார்க்காமல் எப்போதும் அணிக்காக என்னால் எந்தளவுக்கு பங்காற்றலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் கடந்த 15 வருடங்களாக நல்ல ஃபிட்னஸ் கடை பிடித்து சிறப்பாக செயல்பட்டதன் பயனாக 500 போட்டிகளில் விளையாடியது பற்றி விராட் கோலி மேலும் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சாதனைகள் அணிக்கு தேவைப்படும் சமயங்களில் நிகழ்ந்தால் அது வெறும் நம்பர்களாக மட்டுமல்லாமல் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். இந்த 15 – 20 வருடங்களில் நடந்தது எதுவும் நிலைக்கப் போவதில்லை. மாறாக களத்தில் நீங்கள் அணிக்காக எந்த தாக்கத்தை ஏற்படுத்தினீர்கள் என்பதே எனக்கு ஸ்பெஷலாக அமையும்”

“அத்துடன் இந்த தொடரில் அதிக நேரம் எடுத்து விளையாடுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் நல்ல இடங்களிலேயே பந்து வீசினார்கள். அதன் காரணமாக நான் பந்து தேயும் வரை பொறுமையாகயும் பிட்ச் மற்றும் வெளிப்புற களம் மெதுவாக மாறும் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் நாம் நினைப்பது போல் எளிதாக ரன்கள் வரவில்லை. அதனால் நான் எப்போதும் 1 ரன்னை இரண்டாக மாறும் வாய்ப்பை விடுவதில்லை. பொதுவாக நான் மற்றவர்களைப் போல பவுண்டரிகள் அடித்து பெரிய ரன்கள் குவிப்பவர் கிடையாது”

இதையும் படிங்க:வீடியோ : என்னய்யா உருட்டு இது? ஸ்டம்ப்பை நொறுக்கி அம்பயரை வெளுத்த ஹர்மன்ப்ரீத் கௌர் – சொதப்பிய இந்தியா, நடந்தது என்ன

“மாறாக வெறும் 6 பவுண்டரியுடன் 90களில் நான் விளையாடினாலே அது எதிரணியின் மீது அழுத்தத்தை கொடுக்கும். என்னுடைய ஃபிட்னஸ் வெவ்வேறு விதமான கிரிக்கெட்டில் விரைவாக உட்பட்டு விளையாடு உதவுகிறது. அதனால் 300 பந்துகள் எதிர்கொண்டாலும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் என்னால் விளையாட முடியும். இந்தியாவுக்காக கனவிலும் நினைக்காத 500 போட்டியில் விளையாடுவதற்காக மிகவும் பெருமையடைகிறேன். இவை அனைத்தும் கடின உழைப்பாகும்” என்று கூறினார்.

Advertisement