- Advertisement -
ஐ.பி.எல்

இது சோகமா இருந்தாலும்.. தோனி மேஜிக் செஞ்சு அந்த மகத்தான கதையை எழுதுவாரு.. ராயுடு பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் திண்டாடி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை அதற்கடுத்த 4 போட்டிகளில் வரிசையாக தோற்றது. அதன் காரணமாக ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த சென்னை இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதே கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் சந்தித்த காயத்தால் எஞ்சிய ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது சிஎஸ்கே அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சோகத்தைக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் ஏற்கனவே தடுமாறி வரும் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ருதுராஜ் மட்டுமே ஓரளவு பெரிய ரன்கள் குவித்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தரமான பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்.

- Advertisement -

சோகம் மாறும்:

இருப்பினும் முழங்காலில் ஏற்பட்ட பெரியக் காயத்தால் விலகியுள்ள அவருக்கு பதிலாக தோனி எஞ்சிய 9 போட்டிகளில் கேப்டனாக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ருதுராஜ் போன்ற தரமான பேட்ஸ்மேன் காயத்தால் விலகியுள்ளது சென்னைக்கு சோகமான விஷயம் என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். ஆனால் தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவது சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அனுபவம் மற்றும் கேப்டன்ஷிப் பண்புகளால் தோனி இங்கிருந்து சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்லும் மேஜிக் கதையை எழுதுவார் என்றும் ராயுடு நம்பிக்கை கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்துக்கும் முதலில் கேப்டன் ருதுராஜ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது சோகமான விஷயம்”

- Advertisement -

ராயுடு நம்பிக்கை:

“ஆனால் அனைத்து ரசிகர்களும் கண்டிப்பாக எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை தலைமைத் தாங்குவதைப் பார்க்க உற்சாகத்துடன் இருப்பார்கள். அவர் எப்போதும் தன்னுடைய மேஜிக்கை வெளியே இழுத்து சிஎஸ்கே அணியை இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறச் செய்யலாம். அது ஒரு மகத்தான கதையாக இருக்கும். அதனால் இங்கிருந்து சிஎஸ்கே ஆட்டத்தைப் பார்க்க நான் உற்சாகமாக இருக்கிறேன்”

இதையும் படிங்க: தோனி கேப்டனா வந்துட்டா மட்டும் ஜெயிக்க முடியுமா? சிஎஸ்கே அணியில் 3 ஓட்டை இருக்கு.. உத்தப்பா கருத்து

“தனது மேஜிக்கை தோனி சிஎஸ்கே அணி முழுவதும் பின்னுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து தோனி தலைமையில் சிஎஸ்கே இன்று கொல்கத்தாவை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இங்கிருந்து அடுத்த 9 போட்டிகளில் சென்னை குறைந்தது 6 அல்லது 7 வெற்றிகளை பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -