தோனி கேப்டனா வந்துட்டா மட்டும் ஜெயிக்க முடியுமா? சிஎஸ்கே அணியில் 3 ஓட்டை இருக்கு.. உத்தப்பா கருத்து

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடும் சென்னை இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதே கடினமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே தடுமாற்றமாக விளையாடி வரும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் துறையில் ருதுராஜ் மட்டுமே ஓரளவு நிலையாக பெரிய ரன்கள் குவித்து தாக்கத்தை ஏற்படுத்தும் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். தற்போது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் அவர் வெளியேறியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதே சமயம் எஞ்சிய போட்டிகளில் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தோனியால் முடியாது:

5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இங்கிருந்து மீண்டும் சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தோனி கேப்டனாக வருவதால் மட்டும் சிஎஸ்கே மேஜிக் செய்து வெற்றிகளை பெறப்போவதில்லை என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா மறைமுகமாக கூறியுள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“தோனி கேப்டனாக இருப்பதால் மட்டும் சிஎஸ்கே பக்கம் வெற்றி அலை தாமாக திரும்பும் என்று நான் நினைக்கவில்லை. சென்னை அணியில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது அல்லவா? அதை எப்படி நீங்கள் அடைக்கப் போகிறீர்கள்? முதலில் ஃபார்மை தேடிக்கொண்டிருந்த ருதுராஜ் போன்ற சென்னை அணியின் ஒரே தரமான பேட்ஸ்மேன் இடத்தை எப்படி நீங்கள் நிரப்ப போகிறீர்கள்?”

- Advertisement -

உத்தப்பா கருத்து:

“பஞ்சாப்புக்கு எதிராக ரிட்டையர்டு அவுட்டாவதற்கு முன்பாக 69* ரன்கள் அடித்த கான்வே ஓரளவு நல்ல ஃபார்மை காண்பித்தார். ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் துவங்கியது முதலே தடுமாற்றமாகவே விளையாடுகிறார். இப்போது 3வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ராகுல் திரிபாதி ஏற்கனவே தடுமாறினார்”

இதையும் படிங்க: ஐபிஎல் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டில் தோனி அதுல பெஸ்ட்.. நோபாலில் வெற்றி மிஸ் ஆகிடுச்சு.. மைக்கேல் கிளார்க்

“ருதுராஜ்க்கு பதிலாக யார் வருவார் அவர் எந்தளவுக்கு செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்? சாம் கரன் மீண்டும் வருவாரா என்பது போன்ற நிறைய கேள்விகள் இருக்கின்றன. சென்னை அணியில் இப்படி நகர்ந்து கொண்டிருக்கும் பல துண்டுகள் இருக்கிறது. இன்னும் நமக்கு தெரியாத பல துண்டுகள் அடுத்தப் போட்டியில் அம்பலமாகும். இதையும் தாண்டி சிஎஸ்கே இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்று கூறினார்.

Advertisement