ஐபிஎல் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டில் தோனி அதுல பெஸ்ட்.. நோபாலில் வெற்றி மிஸ் ஆகிடுச்சு.. மைக்கேல் கிளார்க்

Micheal Clarke
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறி வருகிறது. அந்த அணியின் நம்பிக்கை நாயகன் தோனி 43 வயதில் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாட வருகிறார். அந்த வாய்ப்பில் இதுவரை ஒருமுறை கூட அவர் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யாததால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

குறிப்பாக காலம் கடந்த வயதில் விளையாடுவதை விட்டுவிட்டு தோனி ஓய்வு பெற வேண்டும் என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே ருதுராஜ் கெய்க்வாட் காயத்தை சந்தித்துள்ளதால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக தோனி தலைமையில் எஞ்சியப் போட்டிகளில் சென்னை விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

உலகின் சிறந்த கீப்பர்:

இந்நிலையில் ஐபிஎல் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் 43 வயதிலும் தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்று 2015 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சகர்களுக்கு பதிலடிக் கொடுத்துள்ளார். அதைத் தாண்டி பேட்டிங்கில் தோனி அடிக்கும் ரன்கள் சென்னைக்கு போனஸ் என்றும் கிளார்க் கூறியுள்ளார். அத்துடன் பஞ்சாப்புக்கு எதிரான கடந்தப் போட்டியில் தோனிக்கு நியாயமான நோபால் கொடுத்திருந்தால் சிஎஸ்கே வென்றிருக்கும் என்றும் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதும் தோனி சிறந்த விக்கெட் கீப்பர். என்னுடைய கருத்துப்படி ஐபிஎல் மட்டுமன்றி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் தோனி இப்போதும் சிறந்த கீப்பர். எனவே விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷிப் ஆகியவற்றால் தோனி சென்னை அணிக்கு முக்கிய பங்காற்றுகிறார். அதைத் தாண்டி அவர் அடிக்கும் ரன்கள் போனஸ்”

- Advertisement -

கிளார்க் பாராட்டு:

“உண்மையில் அவர் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார். இவை அனைத்தும் வெற்றியைப் பெறுவதைப் பற்றியது. நாளின் இறுதியில் சென்னை அணி வெற்றிப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும். கடந்தப் போட்டியில் இடுப்புக்கு மேல வீசப்பட்ட நோபால் சரியானது என்று அறிவிக்கப்பட்டது”

இதையும் படிங்க: காயமடைந்தாலும் சிஎஸ்கே அணிக்காக இதை செய்வேன்.. இளம் கீப்பர் தோனி எல்லாத்தையும் மாத்துவார்.. ருதுராஜ் உருக்கம்

“அதில் தோனி சிக்ஸர் அடித்தார். ஒருவேளை அது நோபாலாக வழங்கப்பட்டிருந்தால் தோனி ஃப்ரீ ஹிட்டில் பௌண்டரி அடித்திருப்பார். அது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் கடந்தப் போட்டியில் சென்னை ஒரு பந்தில் வெற்றியை நழுவ விட்டது. அந்தளவுக்கு அவர்கள் வெற்றியை நெருங்குகிறார்கள். எனவே அந்த வெற்றியைப் பிடிக்க தேவையான விஷயங்களை சென்னை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement